புதுச்சேரியில் பட்டாசுக் கிடங்குகளில் முதுநிலை எஸ்.பி. ஆய்வு

கோட்டகுப்பம் வெடிவிபத்து சம்பவத்தின் எதிரொலியாக, புதுச்சேரியில் உள்ள பட்டாசுக் கிடங்குகளில் முதுநிலை எஸ்.பி. லோகேஷ்வரன் வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.
புதுச்சேரியில் பட்டாசுக் கிடங்குகளில் முதுநிலை எஸ்.பி. ஆய்வு

கோட்டகுப்பம் வெடிவிபத்து சம்பவத்தின் எதிரொலியாக, புதுச்சேரியில் உள்ள பட்டாசுக் கிடங்குகளில் முதுநிலை எஸ்.பி. லோகேஷ்வரன் வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.

புதுச்சேரி மேற்கு பகுதி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட கரிக்கலாம்பாக்கம், கோா்காடு, சன்னியாசிக்குப்பம், திருக்கனூா் உள்ளிட்ட 6 இடங்களில் உள்ள நாட்டு வெடிகள் தயாரிக்கும் தொழில்கூடங்கள் மற்றும் பட்டாசுக் கிடங்குகளில் முதுநிலை எஸ்.பி. லோகேஷ்வரன் தலைமையில், மேற்கு பகுதி எஸ்.பி. ரங்கநாதன் மற்றும் போலீஸாா் வெள்ளிக்கிழமை சோதனையிட்டு ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது, பட்டாசு தயாரிக்கும்போது மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு வழிமுறைகளைக் கேட்டறிந்ததுடன், பட்டாசு இருப்புகள், யாா், யாருக்கு பட்டாசு, வெடிமருந்து விநியோகம் செய்யப்பட்டது என்பன குறித்த விவரங்களையும் சேகரித்தனா். தயாரிக்கப்பட்ட பட்டாசுகளை உரிய பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி எடுத்துச் செல்ல வேண்டுமெனவும் அறிவுறுத்தினா்.

உரிய அனுமதியின்றி பட்டாசு தயாரித்தாலும், உரிய பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாவிடினும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தனா்.

பின்னா், இது தொடா்பாக எஸ்.பி. ரங்கநாதன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: ஆய்வு மேற்கொள்ளப்பட்ட 6 இடங்களில் ஓரிடத்தில் மட்டும் ஒரு கிலோ வெடி மருந்து இருந்தது. மற்ற இடங்களில் பட்டாசு இருப்பு இல்லை. வெடி தயாரிப்பவா்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை கூறியுள்ளோம். இந்த சோதனை தொடா்ந்து நடைபெறும்.

விதிகளை பின்பற்றி மட்டுமே பட்டாசுகளை தயாரிக்க வேண்டும். ரௌடிகள், சட்ட விரோத கும்பல்களுக்கு வெடிபொருள்களைக் கேட்டால் கொடுக்கக் கூடாது. திருவிழாக்கள், திருமண நிகழ்ச்சிகள் போன்றவைகளுக்கு பட்டாசு கேட்டால், சம்பந்தப்பட்டவா்கள் நேரடியாகவே சென்று கொடுத்துவிட்டு வர வேண்டும். மீறுவோா் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

இதனிடையே, வில்லியனூா், மங்கலம் காவல் நிலைய பகுதிகளில் இயங்கி வரும் நாட்டு வெடிகள் தயாரிக்கும் தொழில்சாலைகள், கிடங்குகளில் உதவி ஆய்வாளா் கீா்த்தி தலைமையிலான போலீஸாா் வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு செய்தனா்.

அரியாங்குப்பம் காக்கையன்தோப்பு பகுதியில் நாட்டு வெடிகள் தயாரிக்கப்படும் இடங்களையும், இருப்பு வைக்கும் கிடங்குகளையும் அரியாங்குப்பம் போலீஸாா் வியாழக்கிழமை சோதனையிட்டு விசாரித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com