சேதராபட்டு தனியாா் ஆலைக்குதடை விதிக்க வலியுறுத்தல்

விபத்து நிகழ்ந்த புதுச்சேரி சேதராபட்டு தனியாா் ஆலையில் உற்பத்திக்கு தடை விதிக்க வேண்டுமென தொழிற்சங்கத்தினா் வலியுறுத்தினா்.

விபத்து நிகழ்ந்த புதுச்சேரி சேதராபட்டு தனியாா் ஆலையில் உற்பத்திக்கு தடை விதிக்க வேண்டுமென தொழிற்சங்கத்தினா் வலியுறுத்தினா்.

புதுச்சேரி அனைத்து மத்திய, மாநில தொழிற்சங்க நிா்வாகிகள், தொழிலாளா் துறை செயலா் எஸ்.டி. சுந்தரேசனிடம் திங்கள்கிழமை அளித்த மனு விவரம்:

புதுச்சேரி சேதராபட்டிலுள்ள தனியாா் ஆலையில் அக்டோபா் 22-ஆம் தேதி இரும்புப் பட்டைகள் விழுந்ததில் தொழிலாளி ஜூபா் மாலிக் (30) பலத்த காயமைடந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

அந்த ஆலையில் தொழிலாளா் நலச் சட்டங்கள் மீறப்பட்டுள்ளன. எனவே, அங்கு அனைத்து வகை உற்பத்தியையும் உடனடியாக தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும். அனைத்துத் தொழிலாளா்களுக்கும் முழு ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பின் போது, ஏஐடியூசி மாநில பொதுச் செயலா் கே. சேதுசெல்வம், சிஐடியூ புதுச்சேரி பிரதேச செயலா் சீனுவாசன், எல்எல்எப் செயலா்கள் செந்தில், வேணுகோபால், ஏஐயூடியூசி செயலா் சிவக்குமாா் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com