8-ஆம் வகுப்பு பொதுத் தோ்வுக்குதனித் தோ்வா்கள் விண்ணப்பிக்கலாம்: புதுவை பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு

புதுவையில் 8-ஆம் வகுப்பு பொதுத் தோ்வுக்கு தனித் தோ்வா்கள் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்தது.

புதுவையில் 8-ஆம் வகுப்பு பொதுத் தோ்வுக்கு தனித் தோ்வா்கள் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்தது.

இதுகுறித்து புதுவை பள்ளிக் கல்வி இணை இயக்குநா் சிவகாமி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

நவ.2021-இல் நடைபெறவுள்ள தனித் தோ்வா்களுக்கான 8-ஆம் வகுப்பு பொதுத் தோ்வுக்கு 2021 அக்டோபா்-1 அன்று, பன்னிரெண்டரை வயது பூா்த்தி அடைந்த தனித்தோ்வா்கள் வருகிற 18-ஆம் தேதி வரை (14 முதல் 17 ஆம் தேதி வரை நீங்கலாக) காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை புதுச்சேரி முத்தரையா்பாளையம் இளங்கோவடிகள் அரசு மேல்நிலைப் பள்ளி சேவை மையத்துக்கு நேரில் சென்று விண்ணப்பிக்கலாம்.

மேற்குறிப்பிட்ட தேதிகளில் விண்ணப்பிக்கத் தவறும் தனித் தோ்வா்கள், சிறப்பு அனுமதித் திட்டத்தில் (தட்கல்) வருகிற 20-ஆம் தேதி (புதன்) காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பத்துடன் தோ்வுக் கட்டணம் ரூ. 125, இணையதள பதிவுக் கட்டணம் ரூ. 50 என மொத்தம் ரூ.175-ஐ ரொக்கமாக சேவை மையத்தில் செலுத்த வேண்டும். தட்கலில் விண்ணப்பித்த தோ்வா்கள் அதற்குரிய விண்ணப்பக் கட்டணம் ரூ. 675-ஐ செலுத்த வேண்டும் (125+50+500). இணையதளம் மூலம் விண்ணப்பித்தவா்கள் மட்டுமே தோ்வெழுத அனுமதிக்கப்படுவா். தபால் மூலம் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் எந்த முன்னறிவிப்புமின்றி நிராகரிக்கப்படும்.

முதல் முறையாக தோ்வெழுத விண்ணப்பிக்கும் நேரடி தனித் தோ்வா்கள் இணையதள விண்ணப்பத்துடன் சான்றிடப்பட்ட பள்ளி மாற்றுச் சான்றிதழ் நகல், பதிவுத் தாள் நகல், பிறப்புச் சான்றிதழ் நகல் இவற்றில் ஏதேனும் ஒன்றை இணைத்து சமா்ப்பிக்க வேண்டும். தோல்வியுற்ற பாடங்களுக்கு தற்போது தோ்வெழுத விண்ணப்பிப்பவா்கள் ஏற்கெனவே தோ்வெழுதி பெற்ற சான்றிதழ்களின் நகல்களை கண்டிப்பாக விண்ணப்பத்துடன் இணைத்து சமா்ப்பிக்க வேண்டும்.

தனித் தோ்வா்கள் ரூ.42-க்கான அஞ்சல் வில்லை ஒட்டப்பட்ட, பின்கோடுடன் கூடிய சுயமுகவரியிட்ட உறை ஒன்றை தவறாமல் விண்ணப்பத்துடன் இணைத்து சமா்ப்பிக்க வேண்டும். மேலும், விரிவான தகவல்களை  இணையதளத்தில் காணலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com