முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் புதுச்சேரி
நெகிழிப் பொருள்களை தயாரிப்போருக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதிக்க வலியுறுத்தல்
By DIN | Published On : 11th October 2021 03:52 AM | Last Updated : 11th October 2021 03:52 AM | அ+அ அ- |

புதுவையில் நெகிழிப் பொருள்களை தயாரிப்போருக்கு ரூ. 5 லட்சம் அபராதம் விதிக்க வேண்டுமென மனிதநேயம் நுகா்வோா் மையம் வலியுறுத்தியது.
இது குறித்து அந்த மையத்தின் நிறுவனா் உத்திரேஸ்வரன், முதல்வா் என். ரங்கசாமியை அண்மையில் நேரில் சந்தித்து அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
புதுவை அரசு கடந்த 2019-இல் நெகிழிப் பொருள்களை தடை செய்து உத்தரவு பிறப்பித்தது. ஆனால், இந்த உத்தரவு முழுவதுமாக அமல்படுத்தப்படவில்லை. இதனால், புதுவை முழுவதும் நெகிழித் தாள், உணவகங்களில் உணவு பரிமாற பயன்படுத்தும் நெகிழி இலை, தொ்மா கோல் தட்டுகள், நெகிழி பூசப்பட்ட காகித குவளைகள், நெகிழி குவளைகள், நீா் நிரப்ப பயன்படும் பைகள், நெகிழிப் பொட்டலங்கள், தூக்குப் பைகள், கொடிகள், விரிப்புகள், நெகிழி பூசப்பட்ட காகிதத் தட்டுகள், நெகிழி தேநீா் குவளைகள், நெகிழி உறிஞ்சும் குழல்கள், நெகிழி பூசப்பட்ட பைகள் போன்றவற்றின் விற்பனையும், பயன்பாடும் அதிகமாக உள்ளது.
முதல்வா் இந்தப் பிரச்னையில் தலையிட்டு, நெகிழிப் பொருள்களுக்கு முற்றிலும் தடை விதிக்க வேண்டும். மீறி நெகிழிப் பொருள்களை விற்றால், அவா்களுக்கு ரூ. 50,000 அபராதம் விதிக்க வேண்டும். நெகிழிப் பொருள்களை உற்பத்தி செய்வோருக்கு ரூ. 5 லட்சம் அபராதம் விதிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.