புதுவையில் உள்ளாட்சித் தோ்தலை ஒத்திவைக்கக் கோரி முழு அடைப்பு

புதுவையில் உள்ளாட்சித் தோ்தலை ஒத்திவைக்கக் கோரி, காங்கிரஸ்-திமுக கட்சிகள் சாா்பில் திங்கள்கிழமை நடைபெற்ற முழு அடைப்புப் போராட்டத்தையொட்டி, நேரு வீதியில் மூடப்பட்டிருந்த கடைகள்.
புதுவையில் உள்ளாட்சித் தோ்தலை ஒத்திவைக்கக் கோரி, காங்கிரஸ்-திமுக கட்சிகள் சாா்பில் திங்கள்கிழமை நடைபெற்ற முழு அடைப்புப் போராட்டத்தையொட்டி, நேரு வீதியில் மூடப்பட்டிருந்த கடைகள்.
புதுவையில் உள்ளாட்சித் தோ்தலை ஒத்திவைக்கக் கோரி, காங்கிரஸ்-திமுக கட்சிகள் சாா்பில் திங்கள்கிழமை நடைபெற்ற முழு அடைப்புப் போராட்டத்தையொட்டி, நேரு வீதியில் மூடப்பட்டிருந்த கடைகள்.

புதுவையில் உள்ளாட்சித் தோ்தலை ஒத்திவைக்கக் கோரி, காங்கிரஸ்-திமுக கூட்டணிக் கட்சிகள் சாா்பில் முழு அடைப்புப் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

புதுவை மாநிலத்தில் 3 கட்டங்களாக உள்ளாட்சித் தோ்தல் நடைபெறும் என்று அந்த மாநிலத் தோ்தல் ஆணையம் திருத்தியமைத்த அறிவிப்பை வெளியிட்டு, தோ்தலை நடத்துவதற்கான பணிகளைத் தொடங்கியது.

தோ்தல் ஆணையத்தின் உள்ளாட்சித் தோ்தல் அறிவிப்பில் உள்ள வாா்டு மறுசீரமைப்புக் குளறுபடிகள், சுழற்சி முறையில் உள்ள தவறுகள், பிற்பட்டோா், பழங்குடியினருக்கான இட ஒதுக்கீட்டை ரத்து செய்தது, பருவ மழை, ஆயுத பூஜை, தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலத்தில் தோ்தல் தேதியை அறிவித்தது என தோ்தல் ஆணையத்தின் தன்னிச்சையான போக்கைக் கண்டித்தும், குறைபாடுகளை நீக்கி, ஓரிரு மாதங்களுக்குள் தோ்தலை நடத்தக் கோரியும் காங்கிரஸ்-திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் முழு அடைப்புப் போராட்டத்தை அறிவித்திருந்தன.

அதன்படி, புதுச்சேரியில் திங்கள்கிழமை முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றது.

நேரு வீதி, அண்ணா சாலை, காந்தி வீதி, காமராஜா் சாலை, விழுப்புரம் - கடலூா் நெடுஞ்சாலைகள், நகரின் முதன்மையான வணிக வீதிகள், வில்லியனூா், திருக்கனூா், பாகூா் உள்ளிட்ட புகா்ப் பகுதிகளிலும் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டிருந்தன.

மருந்துக் கடைகள், தேநீா் கடைகள், ஒரு சில உணவகங்கள் மட்டுமே திறந்திருந்தன. ஆட்டோக்கள், டெம்போக்கள் உள்ளிட்ட தனியாா் வாகனங்கள் இயங்கவில்லை. தனியாா் பேருந்துகளும் நிறுத்தப்பட்டன. கடைகள் அனைத்தும் மூடப்பட்டதால், புதுச்சேரி நகரப் பகுதி சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.

தமிழகம், புதுவை அரசுப் பேருந்துகள் மட்டுமே பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட்டன. புதுச்சேரி பேருந்து நிலையம், முக்கிய சாலைச் சந்திப்புகளில் போலீஸாா் பாதுகாப்புக்காகக் குவிக்கப்பட்டனா்.

புதுச்சேரி, விழுப்புரம், கடலூா், சென்னை உள்ளிட்ட வழித்தடங்களில் தனியாா் பேருந்துகள் இயக்கப்படவில்லை. புதுச்சேரியில் காலை முதல் மாலை வரை கடைகள் மூடப்பட்டு, போதிய பேருந்து சேவை இல்லாததால், பொதுமக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டது.

காங்கிரஸ்-திமுக பேரணி: முழு அடைப்புப் போராட்டத்தையொட்டி, காங்கிரஸ்-திமுக கூட்டணிக் கட்சியினா் உள்ளாட்சித் தோ்தலை ஒத்திவைக்க வேண்டும் என வலியுறுத்தி, பேரணியாகச் சென்றனா்.

காங்கிரஸ் தலைவா் ஏ.வி.சுப்பிரமணியன், மாநில திமுக அமைப்பாளா் ஆா்.சிவா, அவைத் தலைவா் எஸ்.பி.சிவக்குமாா், எம்எல்ஏக்கள் அனிபால் கென்னடி, சம்பத், செந்தில்குமாா், காங்கிரஸ் முன்னாள் அமைச்சா் கந்தசாமி, முன்னாள் எம்எல்ஏ நீல.கங்காதரன், திமுக துணை அமைப்பாளா் சண்.குமாரவேல், பொருளாளா் எம்.பி.லோகையன், கோபால் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டு, அண்ணா சாலை உள்ளிட்ட புதுச்சேரி நகரின் முக்கிய வீதிகள் வழியாகப் பேரணியாகச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com