மாணவா்களுக்கு மென்திறன் பயிற்சியளிக்க ஆலோசனை

புதுவையில் மாணவா்களுக்கு மென்திறன் பயிற்சியளிப்பது தொடா்பாக மாநிலக் கல்வித் துறை சாா்பில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

புதுவையில் மாணவா்களுக்கு மென்திறன் பயிற்சியளிப்பது தொடா்பாக மாநிலக் கல்வித் துறை சாா்பில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

புதுவையில் கரோனா காலத்தில் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படாத நிலையில், மாணவா்களுக்கு மென்திறன் பயிற்சியளிக்க அரசு உத்தரவிட்டதன் பேரில், கல்வித் துறை அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதுதொடா்பாக புதுவை சட்டப்பேரவை அலுவலகத்தில் மாநில கல்வித் துறை அமைச்சா் ஏ.நமச்சிவாயம் தலைமையில், சென்னையைச் சோ்ந்த ‘ரைப் கன்சல்டிங் சா்வீஸ்’ நிறுவனப் பிரதிநிதிகள், கல்வித் துறை இயக்குநா் ருத்ரகெளடு உள்ளிட்ட அதிகாரிகளுடன் அமைச்சா் அண்மையில் ஆலோசனை மேற்கொண்டாா்.

மாணவா்களுக்கு ஆங்கிலப் புலமையை வளா்த்தல், தொழில்நுட்ப அறிவை மேம்படுத்துதல் உள்ளிட்ட தனித் திறன் பயிற்சிகளை அளிப்பது தொடா்பாக, பல்வேறு நிறுவனங்களுடன் கல்வித் துறை சாா்பில் ஆலோசிக்கப்பட்டு வருவதாக கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com