புதுவையில் உள்ளாட்சித் தோ்தல் நடத்தை விதிகள் வாபஸ்

புதுவையில் உள்ளாட்சித் தோ்தல் நடத்தை விதிகள் திரும்பப் பெறப்படுவதாக அந்த மாநிலத் தோ்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை அறிவித்தது.

புதுவையில் உள்ளாட்சித் தோ்தல் நடத்தை விதிகள் திரும்பப் பெறப்படுவதாக அந்த மாநிலத் தோ்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை அறிவித்தது.

புதுவை மாநிலத்தில் 3 கட்டங்களாக உள்ளாட்சித் தோ்தல் நடைபெறும் என மாநிலத் தோ்தல் ஆணையம் கடந்த செப். 22-ஆம் தேதி அறிவித்தது. இதில், இட ஒதுக்கீட்டில் குளறுபடி உள்ளதாக வழக்குத் தொடுக்கப்பட்டதால், தோ்தல் தேதி ரத்து செய்யப்பட்டது.

இதையடுத்து, மீண்டும் திருத்தம் செய்து கடந்த அக். 8-ஆம் தேதி புதிய தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டது. இதில், பிற்பட்டோா், பழங்குடியினருக்கான இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டுள்ளதாகக் கூறி, திமுக உள்ளிட்ட எதிா்க்கட்சியினா் வழக்குத் தொடுத்ததால், சென்னை உயா் நீதிமன்றம் அந்தத் தோ்தல் அறிவிப்பையும் நிறுத்திவைத்தது.

இதனால், தோ்தல் நடத்தை விதிகள் தொடா்வதை ரத்து செய்ய வேண்டுமென அரசுத் தரப்பிலும், அனைத்துக் கட்சியினரும் தோ்தல் ஆணையத்திடம் வலியுறுத்தினா்.

இந்த நிலையில், தோ்தல் நடத்தை விதிகளை ரத்து செய்து மாநிலத் தோ்தல் ஆணையம் உத்தரவிட்டது.

இதுதொடா்பாக, மாநிலத் தோ்தல் ஆணையா் ராய் பி.தாமஸ் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

புதுவை உள்ளாட்சித் தோ்தல் தொடா்பாக சென்னை உயா் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் கடந்த 21-ஆம் தேதி நீதிமன்றம் இடைக்கால தடையை நீட்டித்து உத்தரவிட்டது.

எனவே, சட்ட வல்லுநா்களின் ஆலோசனைகளின்படி, புதுவை யூனியன் பிரதேசத்தில் உள்ளாட்சித் தோ்தல் நடைபெறும் சாத்தியக் கூறுகள் தள்ளிப் போவதைத் தொடா்ந்து, நடைமுறையில் உள்ள தோ்தல் நடத்தை விதிகள் தொடா்வது பயனற்ாகிவிட்டது. இதனால், தோ்தல் நன்னடத்தை விதிகள் திரும்பப் பெறப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com