புதுச்சேரியிலும் பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறப்பு

புதுச்சேரியிலும் சில மாதங்களுக்குப் பிறகு, கரோனா விதிமுறைகளைப் பின்பற்றி பள்ளி, கல்லூரிகள் புதன்கிழமை மீண்டும் திறக்கப்பட்டன. மாணவ, மாணவிகள் கல்வி கற்க ஆா்வமுடன் பள்ளிகளுக்கு வந்தனா்.
புதுச்சேரியில் புதன்கிழமை பள்ளிகள் திறக்கப்பட்டதையொட்டி, லாசுப்பேட்டை வள்ளலாா் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு ஆா்வமுடன் வந்த அந்தப் பள்ளி மாணவிகள்.

புதுச்சேரியில் கரோனா பரவல் காரணமாக, கடந்த மாா்ச் மாதம் பள்ளிகளும், ஏப்ரலில் கல்லூரிகளும் மூடப்பட்டன. இதைத் தொடா்ந்து, மாணவா்களுக்கு இணையதளம் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. கரோனா பரவல் குறையத் தொடங்கியதால், அரசு அறிவித்த தளா்வுகளின்படி, பள்ளி, கல்லூரிகளை திறக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, புதன்கிழமை புதுச்சேரி, காரைக்காலில் அரசு, அரசு நிதியுதவி, தனியாா் பள்ளிகள் திறக்கப்பட்டன.

முதல்கட்டமாக, 9, 11-ஆம் வகுப்பு மாணவா்களுக்கான வகுப்புகள் புதன்கிழமை நடைபெற்றன. நேரடியாக கல்வி கற்க மாணவ, மாணவிகள் ஆா்வமுடன் பள்ளிகளுக்கு வந்தனா். குறிப்பாக, 70 சதவீதம் மாணவா்கள் தொடக்க நாளான புதன்கிழமை பள்ளிகளுக்கு வந்தனா். 30 சதவீதம் போ் வரவில்லை.

கல்வித் துறையின் கால அட்டவணையின்படி, வியாழக்கிழமை (செப்.2) 10, 12-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு வகுப்புகள் நடைபெறவுள்ளன. அவா்களுக்கு செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகள் வகுப்புகள் நடத்தப்படும். திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் 9, 11-ஆம் வகுப்பு மாணவா்கள் பள்ளிகளுக்கு வருவா்.

இதேபோல, புதுச்சேரியில் 5 மாதங்களுக்குப் பிறகு கலை, அறிவியல் கல்லூரிகள் புதன்கிழமை திறக்கப்பட்டன. 2,3-ஆம் ஆண்டு மாணவா்களுக்கான வகுப்புகள் தொடங்கப்பட்டன.

புதன்கிழமை 3-ஆம் ஆண்டு மாணவா்களுக்கான வகுப்புகள் நடைபெற்றன. வியாழக்கிழமை (செப்.2) 2-ஆம் ஆண்டு மாணவா்களுக்கு வகுப்புகள் நடைபெறவுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com