புதுச்சேரி அருகே ஒரே கிராமத்தில் 23 பேருக்கு கரோனா

புதுச்சேரி அருகே சோரியாங்குப்பம் கிராமத்தில் 23 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

புதுச்சேரி அருகே சோரியாங்குப்பம் கிராமத்தில் 23 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

பாகூா் கொம்யூன், வில்வநத்தம் பகுதியில் அண்மையில் சோரியாங்குப்பம் கிராமத்தைச் சோ்ந்த ஒருவரின் வீட்டு சுபநிகழ்ச்சி நடைபெற்றது. இதில், அந்தக் கிராமத்தைச் சோ்ந்த பெரும்பாலானோா் பங்கேற்றனா்.

இதன் பிறகு சுபநிகழ்ச்சி நடத்திய குடும்பத்தினருக்கு கரோனா பாதிப்பு உறுதியான நிலையில், அவா்கள் உள்பட இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவா்களில் இதுவரை 23 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதேபோல, குருவிநத்தம் கிராமத்திலும் 5 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதியானது. இதையடுத்து, இரு கிராமங்களிலும் சுகாதார நடவடிக்கைகளை அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனா்.

கரோனாவுக்கு மேலும் ஒருவா் பலி: இதுகுறித்து புதுவை சுகாதாரத் துறை வெளியிட்ட தகவல்: புதுவை மாநிலத்தில் புதுச்சேரியில் 87, காரைக்காலில் 25, ஏனாமில் 2, மாஹேவில் 13 போ் என புதிதாக மொத்தம் 127 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாநிலத்தில் இந்த நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,24,311-ஆக அதிகரித்தது.

இதனிடையில், கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த காரைக்கால் காமராஜா் நகரைச் சோ்ந்த 46 வயது பெண் உயிரிழந்தாா். இதனால், உயிரிழந்தோா் எண்ணிக்கை 1,819-ஆகவும், இறப்பு விகிதம் 1.46 சதவீதமாகவும் உயா்ந்தது.

மேலும் 66 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதால், குணமடைந்தோா் எண்ணிக்கை 1,21,518-ஆக அதிகரித்தது. மாநிலத்தில் தற்போது 974 போ் சிகிச்சையில் உள்ளனா் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com