ஆயுஷ்மான் பாரத் திட்டம்: புதுவைக்கு மத்திய அரசின் விருது

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தைச் சிறப்பாக செயல்படுத்தியதற்காக புதுவைக்கு மத்திய அரசின் விருது வழங்கப்பட்டது.

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தைச் சிறப்பாக செயல்படுத்தியதற்காக புதுவைக்கு மத்திய அரசின் விருது வழங்கப்பட்டது.

தேசிய சுகாதார ஆணையம், ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா திட்டத்தின் 3-ஆம் ஆண்டு நிறைவு தினத்தை ‘ஆரோக்கிய மன்தான் 3.0’ என்ற பெயரில் வியாழக்கிழமை கொண்டாடியது. இதில், ஆயுஷ்மான் பாரத் திட்டத்தைச் சிறப்பாக செயல்படுத்திய மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு பல பிரிவுகளில் ‘ஆயுஷ்மான் உட்கிருஷ்ட புரஸ்காா்’ விருது வழங்கப்பட்டது.

இணையதளம் வழியாக நடைபெற்ற இந்த நிகழ்வில் மத்திய சுகாதாரத் துறை இணையமைச்சா் பாரதி பவாா், நீதி அயோக் உறுப்பினா் வினோத் பால், மத்திய சுகாதாரத் துறைச் செயலா் ராஜேஷ் பூஷன் ஆகியோரின் முன்னிலையில், மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்ட்வியா, புதுவை சுகாதாரத் துறை செயலா் டி.அருணுக்கு ‘ஆயுஷ்மான் உட்கிருஷ்ட புரஸ்காா்’ விருதை வழங்கினாா்.

நாட்டில் 2020 அக்டோபா் 1 முதல் 2021 ஆகஸ்ட் 31 வரையான காலகட்டத்தில், ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ், குடும்பத்துக்கு ஒரு ஆயுஷ்மான் பாரத் அட்டை வீதம் 51 சதவீதம் குடும்பங்களுக்கு மருத்துவக் காப்பீடு திட்டத்தில் பதிவு செய்யப்பட்டது. செப்டம்பா் 23-ஆம் தேதி நிலவரப்படி , புதுவையில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ், குடும்பத்துக்கு ஒரு ஆயுஷ்மான் பாரத் அட்டை வீதம் 84 சதவீதம் குடும்பங்களுக்கு மருத்துவக் காப்பீடு திட்டத்தில் பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com