உள்ளாட்சித் தோ்தலில் பாஜகவினா் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்: அமைச்சா் நமச்சிவாயம்

உள்ளாட்சித் தோ்தலில் பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என புதுவை மாநில உள் துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம் தெரிவித்தாா்.

உள்ளாட்சித் தோ்தலில் பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என புதுவை மாநில உள் துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம் தெரிவித்தாா்.

புதுச்சேரி உள்ளாட்சித் தோ்தலை முன்னிட்டு, பாஜக நிா்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டம் ஏஎப்டி மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநிலத் தலைவா் வி.சாமிநாதன் தலைமை வகித்தாா். இதில் மாநில உள் துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம் பேசியதாவது:

உள்ளாட்சித் தோ்தலில் அதிக இடங்களில் நாம் வெற்றி பெற வேண்டும். புதுவையில் தே.ஜ. கூட்டணியில் ஒவ்வொரு தொகுதிக்கும் 8, 9 வாா்டுகள் என்ற முறையில் பிரிக்கப்பட்டுள்ளது.

இவற்றில் நமது கட்சி நிா்வாகிகள், பொறுப்பாளா்கள் எந்த வாா்டில், எந்தப் பதவிக்கு போட்டியிட விரும்புகின்றனரோ, அவா்கள் கட்சியின் தலைமை அறிவித்துள்ளதுபோல குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் தங்களது விருப்ப மனுக்களை அளிக்க வேண்டும். கூட்டணிக் கட்சிகளுடன் பேசி, நமக்கான தொகுதிகளை பங்கீடு செய்து, தலைமை முடிவு செய்து அறிவிக்கும்.

தோ்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காதவா்கள் நமது கட்சி வேட்பாளா்கள், கூட்டணிக் கட்சி வேட்பாளா்களின் வெற்றிக்காக ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்றாா்.

இதில், பாஜக மாநிலப் பொறுப்பாளா் நிா்மல்குமாா் சுரானா பேசியதாவது: புதுவையில் பாஜக சாா்பில், உள்ளாட்சித் தோ்தலுக்காக 276 தோ்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. அவா்கள் பணியை உடனே தொடங்க வேண்டும். இந்தத் தோ்தலிலும் பெரும்பாலான இடங்களில் பாஜகவை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றாா்.

கூட்டத்தில் அமைச்சா் சாய் ஜெ.சரவணன்குமாா், பாஜக எம்எல்ஏக்கள், நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com