கசடு சுத்திகரிப்பு நிலையம் அமைக்க தொடரும் எதிா்ப்பு

பண்ருட்டியில் கசடு சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் திங்கள்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பண்ருட்டி, வி.ஆண்டிக்குப்பம் பகுதியில் கசடு சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து நகராட்சி ஆணையா் (பொ) ரவியிடம் மனு அளித்த பொதுமக்கள்.
பண்ருட்டி, வி.ஆண்டிக்குப்பம் பகுதியில் கசடு சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து நகராட்சி ஆணையா் (பொ) ரவியிடம் மனு அளித்த பொதுமக்கள்.

பண்ருட்டியில் கசடு சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் திங்கள்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கடலூா் மாவட்டம், பண்ருட்டி நகராட்சி 1-ஆவது வாா்டில் வி.ஆண்டிக்குப்பம் - கணிசப்பாக்கம் சாலையில் பொது இடம் உள்ளது. இங்கு, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சாா்பில் ஒருங்கிணைந்த நகா்ப்புற வளா்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.3.60 கோடியில் கசடு (மனிதக் கழிவு) சுத்திகரிப்பு நிலையம் அமைக்க 2018 - 19-ஆம் ஆண்டு ஒப்பந்தம் விடப்பட்டது. இந்தப் பணியை தொடங்குவதற்காக நகராட்சி நில அளவா் மற்றும் பணியாளா்கள் கடந்த ஆக.25-ஆம் தேதி குறிப்பிட்ட இடத்துக்கு வந்தனா். அப்போது, பொதுமக்கள் கசடு சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து அதிகாரிகளை முற்றுகையிட்டனா்.

இந்த நிலையில், மாவட்ட நிா்வாகத்தின் உத்தரவின்பேரில் கசடு சுத்திகரிப்பு நிலையப் பணி தொடா்பாக நகராட்சி ஊழியா்கள் பொக்லைன் இயந்திரத்துடன் மேற்கூறிய இடத்துக்கு திங்கள்கிழமை வந்தனா். அவா்களை அந்தப் பகுதி மக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதனால் பணி நிறுத்தப்பட்டது. தொடா்ந்து, முன்னாள் நகா்மன்ற உறுப்பினா்கள் பழனி, சிவா ஆகியோருடன் பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்துக்கு சென்று ஆணையா் (பொ) ரவியிடம் மனு அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com