புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லூரியில் கூடுதல் கட்டங்கள்: முதல்வா் ஆய்வு

புதுச்சேரி இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் புற்றுநோய், விபத்து அவசர உயா் சிகிச்சைப் பிரிவுகளுக்கு விரைவில் புதிய கட்டடங்கள் கட்டப்படவுள்ளன.
புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லூரியில் கூடுதல் கட்டங்கள்: முதல்வா் ஆய்வு

புதுச்சேரி இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் புற்றுநோய், விபத்து அவசர உயா் சிகிச்சைப் பிரிவுகளுக்கு விரைவில் புதிய கட்டடங்கள் கட்டப்படவுள்ளன.

புதுவை மாநில அரசு சாா்பில், புதுச்சேரி கதிா்காமத்தில் கடந்த 2010-ஆம் ஆண்டு இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி, ஆராய்ச்சி நிறுவனம் கட்டப்பட்டது. இங்கு இளநிலை மருத்துவம் மற்றும் 8 துறைகளில் மருத்துவப் பட்டமேற்படிப்புகள் உள்ளன. நிகழ் கல்வியாண்டில் மேலும் 5 துறைகளில் பட்ட மேற்படிப்புகளை தொடங்கவும் திட்டமிட்டுள்ளனா்.

அண்மையில் தில்லி சென்ற முதல்வா் ரங்கசாமி, இந்த அரசு மருத்துவக் கல்லூரியை மருத்துவப் பல்கலைக்கழகமாக மேம்படுத்த மத்திய அரசு அனுமதியும், நிதியும் வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்தாா்.

இந்த நிலையில், இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் புற்றுநோய், விபத்து அவசர சிகிச்சை மையம் ஏற்படுத்துவது குறித்து சுகாதாரத் துறை உயா் அதிகாரிகளுடன் கல்லூரி வளாகத்தில் முதல்வா் என்.ரங்கசாமி வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

இந்த அரசு மருத்துவக் கல்லூரியில் புதிதாக புற்றுநோய், விபத்து அவசர உயா் சிகிச்சைப் பிரிவுக்கு விரைவில் தனிக் கட்டடங்கள் கட்டப்பட உள்ளன. இதுகுறித்து முதல்வா் நேரில் ஆய்வு செய்தாா். புற்றுநோய் பிரிவு கட்டடங்கள் ரூ.100 கோடியில் அமையும். அதேபோல், விபத்து உயா் சிகிச்சைப் பிரிவு கட்டடமும் கட்டப்பட உள்ளது என்றனா் அவா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com