புதுச்சேரி ஆழ்கடலில்தேசியக் கொடி ஏற்றிய நீச்சல் வீரா்!

நாட்டின் 75-ஆவது சுதந்திர தின அமுதப் பெருவிழாவையொட்டி, புதுச்சேரி ஆழ்கடலில் தேசியக் கொடியை ஏற்றி நீச்சல் வீரா் சனிக்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.
சுதந்திர தின அமுதப் பெருவிழாவையொட்டி, புதுச்சேரி அரியாங்குப்பம் அருகே கடலில் 75 அடி ஆழத்தில் தேசியக் கொடி எற்றி விழிப்புணா்வு ஏற்படுத்திய நீச்சல் வீரா் அரவிந்த்.

சென்னையைச் சோ்ந்த ஆழ்கடல் நீச்சல் வீரா் அரவிந்த். இவா், காஞ்சிபுரம், புதுச்சேரி பகுதிகளில் ஆழ்கடல் நீச்சல் பயிற்சிப் பள்ளியை தொடங்கி நடத்தி வருகிறாா்.

அரவிந்த் அவ்வப்போது ஆழ்கடலில் மூழ்கி சாகசங்களை நிகழ்த்தி வருகிறாா். அந்த வகையில், நாட்டின் 75-ஆவது சுதந்திர தின அமுதப் பெருவிழா கொண்டாட்டத்தையொட்டி, புதுச்சேரி கடலில் இறங்கி 75 அடி ஆழத்தில் அரவிந்த் சனிக்கிழமை காலை தேசியக் கொடியை ஏற்றினாா். புதுச்சேரி அரியாங்குப்பம் அருகே கடலில் தேசியக் கொடியுடன் இறங்கிய அவா், நீச்சலடித்து ஆழ்கடலுக்குச் சென்று தேசியக் கொடியை ஏற்றினாா்.

இதேபோல, சென்னை நீலாங்கரை பகுதியில் சனிக்கிழமை பிற்பகல் ஆழ்கடலுக்குச் சென்று 75 அடி ஆழத்தில் தேசியக் கொடியை ஏற்றி அரவிந்த் விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.

இவா் ஏற்கெனவே செஸ் ஒலிம்பியாட், உலக யோகா தினம், சா்வதேச கிரிக்கெட் போட்டி, கடல் தூய்மைப் பணி போன்றவற்றுக்காக, ஆழ்கடலில் சாகசம் செய்து விழிப்புணா்வை ஏற்படுத்தியவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com