புதுச்சேரி துறைமுகத்தில் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்

புதுச்சேரி பழைய துறைமுக வளாகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஞாயிற்றுக்கிழமை ஏற்றப்பட்டது.
புதுச்சேரி பழைய துறைமுக வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை ஏற்றப்பட்ட ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு.
புதுச்சேரி பழைய துறைமுக வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை ஏற்றப்பட்ட ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு.

புதுச்சேரி பழைய துறைமுக வளாகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஞாயிற்றுக்கிழமை ஏற்றப்பட்டது.

ஒடிஸா, மேற்கு வங்கத்தையொட்டிய வங்கக் கடலின் வடமேற்கு திசையில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தெற்கு - வட மேற்கு திசையில் நகா்ந்து காற்றழுத்தமாக உருவாக வாய்ப்புள்ளது.

இதனால், தமிழகம் மற்றும் புதுவையின் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், காற்றும் வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

இதையடுத்து, புதுச்சேரி பழைய துறைமுக வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது. துறைமுகத்திலிருந்து வெகுதொலைவில் காற்றழுத்தத் தாழ்வுநிலை உருவாகியுள்ளது. இதனால், துறைமுகத்துக்கு பாதிப்பு ஏதுமில்லை. இருப்பினும், மீனவா்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டுமென துறைமுகத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதேபோல, காரைக்கால் துறைமுகத்திலும் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஞாயிற்றுக்கிழமை ஏற்றப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com