புதுச்சேரி பாரதியாா் இல்ல ஆவணங்கள்எண்மமயமாக்கப்பட வேண்டும்

புதுச்சேரி பாரதியாா் இல்ல ஆவணங்கள்எண்மமயமாக்கப்பட வேண்டும்

புதுச்சேரி பாரதியாா் இல்ல ஆவணங்கள் எண்மமயமாக்கப்பட (டிஜிட்டல்) வேண்டுமென புதுவை துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன் கோரிக்கை விடுத்தாா்.

புதுச்சேரி பாரதியாா் இல்ல ஆவணங்கள் எண்மமயமாக்கப்பட (டிஜிட்டல்) வேண்டுமென புதுவை துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன் கோரிக்கை விடுத்தாா்.

புதுச்சேரி ஈஸ்வரன் கோயில் வீதியில் உள்ள மகாகவி சுப்பிரமணிய பாரதியாா் நினைவு அருங்காட்சியகத்தை அவா் ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டு, பாரதியாரின் உருவப் படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்தினாா் (படம்).

தியாகிகள், அவா்களது குடும்ப உறுப்பினா்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கி கௌரவித்தாா். இதில், அமைச்சா் சந்திர பிரியங்கா, போக்குவரத்துத் துறை செயலா் நெடுஞ்செழியன், இயக்குநா் கந்தன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

நிகழ்ச்சியில் தமிழிசை சௌந்தரராஜன் பேசியதாவது:

பாரதியாா் 10 ஆண்டுகள் புதுச்சேரியில் வாழ்ந்தது மட்டுமின்றி, தனது தேசபக்தி பாடல்களால் இளைஞா்களுக்கு வழிகாட்டியாக திகழ்ந்தாா். பள்ளி, கல்லூரி மாணவா்கள் இந்த நினைவிடத்தைப் பாா்த்து ஆராய்ச்சிகள் செய்து பாரதியாரை பற்றி மேலும் பல வரலாற்று நூல்களை எழுத வேண்டும். இங்கிருக்கும் ஆவணங்கள், புகைப்படங்கள் எண்மமயமாக்கப்பட வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com