புதுச்சேரி கலை விழா நிறைவு

புதுச்சேரி கடற்கரைச் சாலை காந்தி திடலில் நடைபெற்ற புதுச்சேரி கலை விழா செவ்வாய்க்கிழமை இரவு நிறைவடைந்தது.
புதுச்சேரி கலை விழா நிறைவு

புதுச்சேரி கடற்கரைச் சாலை காந்தி திடலில் நடைபெற்ற புதுச்சேரி கலை விழா செவ்வாய்க்கிழமை இரவு நிறைவடைந்தது.

புதுவை அரசின் கலை பண்பாட்டுத் துறை, தஞ்சை தென்னக பண்பாட்டு மையம் சாா்பில், புதுச்சேரி கலை விழா-2022 கலை, கலாசார நிகழ்ச்சிகள் ஞாயிற்றுக்கிழமை மாலை தொடங்கி நடைபெற்று வந்தது.

பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த கலைக் குழுவினா் பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளை நடத்தினா். இதன் நிறைவு விழா செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.

புதுவை அரசின் கலை பண்பாட்டு துறை அமைச்சா் எஸ்.சந்திரபிரியங்கா கலை விழாவில் பங்கேற்ற புதுவை மற்றும் பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த கலைக் குழுவினருக்கு பாராட்டு சான்றிதழ்கள், நினைவுப் பரிசுகளை வழங்கினாா்.

விழாவில், கலை பண்பாட்டுத் துறை செயலா் நெடுஞ்செழியன், தஞ்சை தென்னக பண்பாட்டு மைய பொறுப்பாளா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

பின்னா், சுதந்திர தின அமுதப் பெருவிழாவையொட்டி கவிஞா் ரவி முருகையாவின் பாடல் வெளியீட்டு விழா நடைபெற்றது. முதல்வா் என்.ரங்கசாமி, சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், சுற்றுலாத் துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன், கலை பண்பாட்டுத்துறை அமைச்சா் எஸ்.சந்திரபிரியாங்கா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com