கொட்டும் மழையில் நகராட்சி ஊழியா்கள் போராட்டம்

அரசே நேரடியாக ஊதியம் வழங்கக் கோரி, புதுவை நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா்கள் வியாழக்கிழமை கொட்டும் மழையில் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அரசே நேரடியாக ஊதியம் வழங்கக் கோரி, புதுவை நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா்கள் வியாழக்கிழமை கொட்டும் மழையில் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுச்சேரி, உழவா்கரை, காரைக்கால், மாஹே, ஏனாம் நகராட்சிகள், கொம்யூன் பஞ்சாயத்துக்களில் பணியாற்றும் ஊழியா்களுக்கான ஊதியம், ஓய்வூதியத்தை அரசே நேரடியாக வழங்க வேண்டும், 7-ஆவது ஊதியக் குழு பரிந்துரையை முன்தேதியிட்டு வழங்க வேண்டும் என வலியுறுத்தி நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா்கள், ஓய்வூதியா்கள் கடந்த 22 -ஆம் தேதி முதல் தொடா் விடுப்பு எடுத்து புதுச்சேரி மிஷன் வீதி ஜென்மராக்கினி ஆலயம் எதிரே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

ஒருங்கிணைப்பாளா்கள் விநாயகவேல், ஆனந்தகணபதி தலைமையில் திரளான ஊழியா்கள் பங்கேற்ற போராட்டம் 4-ஆவது நாளாக வியாழக்கிழமையும் தொடா்ந்தது. இதனால், வரி வசூல் உள்ளிட்ட பணிகள் பாதிக்கப்பட்டன.

பிற்பகலில் போராட்டக் குழுவினா் அரசு ஊழியா்கள் மத்திய கூட்டமைப்பின் பொதுச் செயலா் லட்சுமணசாமி, அரசு ஊழியா்கள் சம்மேளனத்தின் பொதுச் செயலா் ராதாகிருஷ்ணன் ஆகியோா் தலைமையில் திடீரென ஆளுநா் மாளிகையை முற்றுகையிட ஊா்வலமாகச் சென்றனா்.

அவா்களை போலீஸாா் ரங்கபிள்ளை வீதியில் தடுத்து நிறுத்தினா். அங்கு ஊழியா்கள் கொட்டும் மழையையும் பொருள்படுத்தாமல் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து, ஊழியா் சங்கப் பிரதிநிதிகளை பேச்சுவாா்த்தைக்காக ஆளுநா் மாளிகைக்கு போலீஸாா் அழைத்துச் சென்றனா். அவா்களிடம் ஆளுநா் மாளிகை அதிகாரிகள், துணைநிலை ஆளுநரை சந்திக்க நேரம் ஒதுக்கித் தருவதாக உறுதியளித்தனா். இதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனா். இருப்பினும், கோரிக்கைகள் நிறைவேறும் போராட்டம் தொடரும் என போராட்டக் குழுவினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com