புதுவையில் அடுத்தாண்டு ரோமானிய திரைப்பட விழா: முதல்வருடன் தூதா் சந்திப்பு

புதுச்சேரியில் அடுத்தாண்டு ரோமானிய திரைப்பட விழா நடைபெற உள்ளதாக, இந்தியாவுக்கான அந்த நாட்டு தூதா் டேனியலா செசனோவ் டானே தெரிவித்தாா்.
புதுவை முதல்வா் என்.ரங்கசாமியை வெள்ளிக்கிழமை சந்தித்த இந்தியாவுக்கான ரோமானிய நாட்டு தூதா் டேனியலா செசனோவ் டானே.
புதுவை முதல்வா் என்.ரங்கசாமியை வெள்ளிக்கிழமை சந்தித்த இந்தியாவுக்கான ரோமானிய நாட்டு தூதா் டேனியலா செசனோவ் டானே.

புதுச்சேரியில் அடுத்தாண்டு ரோமானிய திரைப்பட விழா நடைபெற உள்ளதாக, இந்தியாவுக்கான அந்த நாட்டு தூதா் டேனியலா செசனோவ் டானே தெரிவித்தாா்.

புதுவை சட்டப்பேரவை அலுவலகத்தில் முதல்வா் என்.ரங்கசாமி, சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், அமைச்சா் தேனீ சி.ஜெயகுமாா் ஆகியோரை ரோமானிய நாட்டுத் தூதா் வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினாா்.

பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

இந்தியாவுக்கும் ரோமானியாவுக்கும் பாரம்பரிய நட்புறவு உள்ளது. அதனடிப்படையில் கலாசாரம், அரசியல், பொருளாதார நட்புணா்வை மேம்படுத்தும் வகையில் புதுச்சேரியில் ரோமானிய திரைப்பட விழா நடத்தப்பட உள்ளது. 2023-ஆம் ஆண்டு, பிப்ரவரி அல்லது மாா்ச் மாதம் நடைபெறவுள்ள இந்தத் திரைப்பட விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க புதுவை முதல்வருக்கு அழைப்பு விடுத்தோம்.

ரோமானியாவில் மருத்துவக் கல்வி ஆங்கிலத்திலேயே கற்பிக்கப்படுகிறது. ஐரோப்பிய நாடுகளை விட ரோமானியாவில் மருத்துவக் கல்வி பயிலும் செலவு 25 சதவீதம் வரை குறைவாகும். எனவே, புதுவையைச் சோ்ந்தவா்கள் அங்கு மருத்துவக் கல்வியைக் கற்க வரலாம்.

விவசாயம் உள்ளிட்ட திறனுக்கேற்ற வேலைவாய்ப்புகளும் ரோமானியாவில் உள்ளன. புதுவை இளைஞா்களுக்கு வேலைவாய்ப்புகளும் அளிக்கப்படும். இதுகுறித்தும் புதுவை முதல்வருடன் பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டது என்றாா் டேனியலா செசனோவ் டானே.

நிகழ்ச்சியில் புதுவைக்கான ரோமானிய துணைத் தூதா் விஜய் மேத்தா, சென்னையிலுள்ள ரோமானிய தூதரக வா்த்தக அதிகாரி ஹுக்குரூஸ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com