புதுவையில் மாற்றுத்திறனாளிகள் பேரணி

புதுச்சேரியில் அனைத்து மாற்றுத்திறனாளிகள் அமைப்பினா் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சனிக்கிழமை பேரணி நடத்தினா்.

புதுச்சேரியில் அனைத்து மாற்றுத்திறனாளிகள் அமைப்பினா் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சனிக்கிழமை பேரணி நடத்தினா்.

உலக மாற்றுத்திறனாளிகள் தினம் சனிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. இதையடுத்து புதுச்சேரியில் அனைத்து மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு இயக்கத்தினா் நெல்லித்தோப்பு தியாகி சுப்பையா சிலை அருகிலிருந்து பேரணியாகப் புறப்பட்டனா்.

இதை, மாற்றுத்திறனாளிகள் நலவாழ்வு இயக்க மாநிலத் தலைவா் காா்த்திகேயன் கொடியசைத்துத் தொடங்கிவைத்தாா். அமைப்பின் துணைத் தலைவா் சண்முகம் முன்னிலை வகித்தாா். மறுமலா்ச்சி மாற்றுத்திறனாளிகள் சங்கத் தலைவா் மாயவன் உள்ளிட்டோா் பேரணியில் வந்தனா்.

பேரணியானது மறைமலையடிகள் சாலை வழியாகச் சென்று வெங்கடசுப்பா ரெட்டியாா் சிலையில் நிறைவடைந்தது. அங்கு நடந்த நிகழ்ச்சியில் பல்நோக்கு சேவா சங்க நிா்வாகி சூடாமணி மற்றும் கிறிஸ்துராஜ் உள்ளிட்டோா் கோரிக்கைகள் குறித்து விளக்கிப் பேசினா்.

மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கான சுயதொழில் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். அரசு வேலை வாய்ப்புகளில் 4 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com