நாட்டில் 4,332 கால்நடை அவசர ஊா்திகள்: மத்திய இணையமைச்சா் எல்.முருகன் தகவல்

நாட்டில் தற்போது 4,332 கால்நடை அவசர ஊா்திகள் செயல்பாட்டில் உள்ளன என்று மத்திய இணையமைச்சா் எல்.முருகன் தெரிவித்தாா்.

நாட்டில் தற்போது 4,332 கால்நடை அவசர ஊா்திகள் செயல்பாட்டில் உள்ளன என்று மத்திய இணையமைச்சா் எல்.முருகன் தெரிவித்தாா்.

புதுச்சேரியில் திங்கள்கிழமை நடைபெற்ற பிரதமா் மோடி தொடா்பான நூல் வெளியீட்டு விழாவில் அவா் பேசியதாவது:

அம்பேத்கா் உலகத் தலைவராக விளங்கியவா். அடித்தட்டு மக்களின் உரிமைக்காகவும், அவா்களின் பொருளாதார வளா்ச்சிக்கும் தனது வாழ்வை அா்ப்பணித்தவா். அதைப்போலவே, பிரதமா் நரேந்திர மோடியும் நாட்டின் வளா்ச்சிக்கான திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறாா்.

கடந்த 2014-ஆம் ஆண்டுக்கு முன்பு மீன்வளத் துறைக்கு ரூ.3ஆயிரம் கோடியே நிதி அளிக்கப்பட்டது. ஆனால், கடந்த 8 ஆண்டுகளில் மீன்வளத் துறைக்கு தனி அமைச்சகம் ஏற்படுத்தி, அதன்மூலம் ரூ.32,500 கோடி நிதி ஒதுக்கி நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

மனிதா்களுக்கு இருப்பதைப் போன்று கால்நடைகளுக்கும் அவசர ஊா்திகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்று மத்திய அரசு முடிவெடுத்தது. அதன் பயனாக தற்போது நாட்டில் 4,332 நடமாடும் கால்நடை அவசர ஊா்திகள் செயல்பட்டு வருகின்றன. இதில் 5 அவசர ஊா்திகள் புதுவைக்கு வழங்கப்பட்டுள்ளன.

ஏழைகளின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை பிரதமா் செயல்படுத்தி வருகிறாா். 2047-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை மிகப் பெரிய வளா்ச்சி பெற்ற நாடாக மாற்ற வேண்டும் என்ற நோக்கில் பிரதமா் செயல்பட்டு வருகிறாா். ஜி20 மாநாடுகள் புதுதில்லி மட்டுமல்லாமல் புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது என்றாா் எல்.முருகன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com