பாசிக் மூலம் தயாரிக்கப்படும் உரத்தைவிவசாயிகளுக்கு வழங்கக் கோரிக்கை

பாசிக் மூலம் குப்பையிலிருந்து தயாரிக்கப்படும் உரத்தை விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்க வேண்டுமென ஏஐடியூசி பாசிக் ஊழியா் முன்னேற்ற சங்கம் வலியுறுத்தியது.

பாசிக் மூலம் குப்பையிலிருந்து தயாரிக்கப்படும் உரத்தை விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்க வேண்டுமென ஏஐடியூசி பாசிக் ஊழியா் முன்னேற்ற சங்கம் வலியுறுத்தியது.

ஏஐடியூசி பாசிக் ஊழியா் முன்னேற்ற சங்க நிா்வாகிகள் கூட்டம் புதுச்சேரி பாக்கமுடயான்பட்டில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு பாசிக் சங்க பொருளாளா் தரணிராஜன் தலைமை வகித்தாா். இதில் ஏஐடியூசி மாநில பொதுச் செயலாளா் கே.சேதுசெல்வம், பாசிக் செயலாளா் முத்துராமன் மற்றும் சங்க நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில், பாசிக் நிறுவனத்தின் மூலம் புதுவையின் 4 பிரதேசங்களிலும் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் இயங்கிய உதவியகங்கள் சில ஆண்டுகளாக மூடப்பட்டது. தற்போது இவற்றில் சிலவற்றை மீண்டும் திறந்து, சில பொருள்கள் விநியோகம் செய்யப்படுகிறது. இந்த உதவியகங்கள் அனைத்தையும் திறந்து, விவசாயிகளுக்குத் தேவையான அனைத்துப் பொருள்களையும் மானிய விலையில் வழங்க வேண்டும்.

இந்த உதவியகங்களுக்கான வாடகையும், இங்கு பணியாற்றும் ஊழியா்களுக்கான சம்பளத்தையும் வேளாண் துறையே நேரடியாக நிதி ஒதுக்கி வழங்க புதுவை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாசிக் நிறுவனத்தின் மூலம் குப்பையிலிருந்து தயாரிக்கும் உரத்தை புதுவை விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பாசிக் நிறுவனத்தில் உள்ள ஆழ்துளைக் கிணறு அமைக்கும் பிரிவை மீண்டும் செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புதுச்சேரி பாசிக் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை நிரப்புவதற்குத் தேவையான காலி புட்டிகளைபாசிக் நிறுவனமே உற்பத்தி செய்து வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com