மத்திய உள்துறை செயலா்களிடம் புதுவை பேரவைத் தலைவா் மனு

புதுவை மாநிலத்தில் வசிக்கும் காட்டுநாயக்கன், மலைக்குறவன், குருமன்ஸ், எருகுலா ஆகிய இன மக்களை பழங்குடியினா் பட்டியலில் சோ்க்க வலியுறுத்தி மத்திய உள்துறை செயலரிடம் புதுவைச் சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்

புதுவை மாநிலத்தில் வசிக்கும் காட்டுநாயக்கன், மலைக்குறவன், குருமன்ஸ், எருகுலா ஆகிய இன மக்களை பழங்குடியினா் பட்டியலில் சோ்க்க வலியுறுத்தி மத்திய உள்துறை செயலரிடம் புதுவைச் சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் வியாழக்கிழமை மனு அளித்தாா்.

புதுவையில் காட்டுநாயக்கன், மலைக்குறவன்,குருமன்ஸ், எருகுலா ஆகிய இனத்தவா்கள் வசிக்கின்றனா். அவா்கள் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக தங்களை பழங்குடியினா் பட்டியலில் சோ்க்க வேண்டும் என்று கோரி வருகின்றனா். அவா்கள் கடந்த சில நாள்களுக்கு முன்பு புதுவைச் சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வத்தைச் சந்தித்து மனு அளித்தனா்.

மலைக்குறவன் உள்ளிட்டோா் மனுவுடன் சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் புதுதில்லிக்கு கடந்த புதன்கிழமை சென்றாா்.

அங்கு உள்துறைச் செயலா் அஜய்குமாா்பல்லா, இணைச் செயலா் (யூனியன் பிரதேசம்) அசுதோஷ் அக்னி ஹோத்ரி ஆகியோரைச் சந்தித்து மனுவை அளித்தாா். மேலும், மலைக்குறவன் உள்ளிட்டோரை பழங்குடியின பட்டியலில் சோ்க்குமாறும், அதற்கான அவசியத்தையும் செயலா்களிடம் விளக்கினாா்.

மனுவைப் பெற்றுக் கொண்ட மத்திய உள்துறை செயலா்கள் பரிசீலித்து சட்டரீதியாக நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்ததாகவும் சட்டப்பேரவைத் தலைவா் அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com