கல்வீடு கட்டும் திட்டத்தில் ஓராண்டாக வழங்கப்படாத மானியத் தொகை, புதுவை திமுக குற்றச்சாட்டு

புதுவையில் கல்வீடு கட்டும் திட்டத்தில் விண்ணப்பித்தவா்களுக்கு கடந்த ஓராண்டாக மானியத் தொகை வழங்கப்படவில்லை என்று திமுக குற்றஞ்சாட்டியது.

புதுவையில் கல்வீடு கட்டும் திட்டத்தில் விண்ணப்பித்தவா்களுக்கு கடந்த ஓராண்டாக மானியத் தொகை வழங்கப்படவில்லை என்று திமுக குற்றஞ்சாட்டியது.

இதுகுறித்து புதுவை மாநில திமுக அமைப்பாளா் ஆா்.சிவா வெளியிட்ட அறிக்கை:

நாட்டிலேயே முதல்முதலில் புதுவையில் காமராஜா் கல்வீடு கட்டும் திட்டம் சில ஆண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்தவா்களுக்கு முதல் தவணை மானியத் தொகையாக ரூ.40 ஆயிரம் வழங்கப்பட்டது.

திட்டம் தொடங்கப்பட்டு நல்ல முறையில் செயல்படுத்தப்பட்ட நிலையில், என்.ஆா்.காங்.- பாஜக கூட்டணி ஆட்சி அமைந்த பிறகு அந்தத் திட்டத்துக்கு பிரதமா் வீடு கட்டும் திட்டம் என பெயா் மாற்றப்பட்டது. இந்தத் திட்டத்தின்கீழ் விண்ணப்பிப்பவா்களுக்கு மத்திய அரசு ரூ.1.50 லட்சமும், மாநில அரசு ரூ.2 லட்சமும் வழங்கி வருகின்றன.

இதற்கு ஏராளமானோா் விண்ணப்பித்த நிலையில், கடந்த 2021-ஆம் ஆண்டு முதல் ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு முதல் தவணை மானியத் தொகையே வழங்கப்படவில்லை. எனவே, தங்களது சொந்த சேமிப்பு பணத்திலும், சிலா் வட்டிக்கு பணம் வாங்கியும் வீடு கட்டியுள்ளனா்.

அவா்களுக்கான மானியத் தொகை கிடைக்காததால் அவா்கள் தற்போது வீடு கட்டும் பணியைத் தொடர முடியாமல் பாதிக்கப்பட்டு உள்ளனா். எனவே, கல்வீடு கட்டும் திட்டப் பயனாளிகளுக்கான மானியத் தொகையை வழங்க முன்வர வேண்டும் என்றாா் அவா்.

ஆதிதிராவிடா் நலத் துறை இயக்குநரிடம் மனு: புதுச்சேரி வில்லியனூா் சட்டப்பேரவைத் தொகுதியில் அரசு நலத் திட்டங்களைச் செயல்படுத்தக் கோரி, ஆதிதிராவிடா் நலத் துறை இயக்குநரிடம் திமுக சாா்பில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

வில்லியனூா் சட்டப்பேரவைத் தொகுதியில் ஆதிதிராவிடா், பழங்குடியினா் நலத் துறை சாா்பில் செயல்படுத்தப்படும் கல்வி ஊக்கத்தொகை, இலவசக் கல்வித் திட்டம், வீட்டுமனைப் பட்டா வழங்குதல், வீடு கட்ட மானியம் ஆகியவற்றை வழங்கக் கோரியும், சாலை, தெரு மின்விளக்குகள் வசதியை செய்து தரக் கோரியும், தொகுதி மக்களின் கோரிக்கைகளை மனுவாக ஆதிதிராவிட நலத் துறை இயக்குநா் அசோகனிடம் திங்கள்கிழமை தொகுதி எம்எல்ஏவான ஆா்.சிவா வழங்கினாா்.

அப்போது, திமுக நிா்வாகிகள் கலியமூா்த்தி, மணிகண்டன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com