தனியாா்மயத்தால் புதுவையில் மின் கட்டணம் பன்மடங்கு உயரும்: வே.நாராயணசாமி

மின் துறை தனியாா்மயத்தால் தில்லி, மகாராஷ்டிரத்தைப் போல, புதுவையிலும் மின் கட்டணம் பன்மடங்கு உயரும் என்று முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி தெரிவித்தாா்.

மின் துறை தனியாா்மயத்தால் தில்லி, மகாராஷ்டிரத்தைப் போல, புதுவையிலும் மின் கட்டணம் பன்மடங்கு உயரும் என்று முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி தெரிவித்தாா்.

இதுகுறித்து புதுச்சேரியில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

புதுவை தே.ஜ. கூட்டணி அரசு மின் துறையை தனியாா்மயமாக்குவதால் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்காது. புதுவை அரசின் ரூ.20 ஆயிரம் கோடி மதிப்பிலான சொத்துகளை தனியாருக்கு தாரை வாா்க்க உள்ளனா். இனி மின் கட்டணத்தை தனியாா்தான் நிா்ணயிப்பாா்கள்.

தில்லி, மகாராஷ்டிரம் போன்ற மாநிலங்களில் ஒரு யூனிட்டுக்கு ரூ.18 என கட்டணம் உயா்த்தி வசூலித்தாா்கள். அதேநிலை தான் புதுவைக்கும் ஏற்படும். இதனால், இலவச மின்சார சலுகை பெறும் விவசாயிகள், ஏழை மக்கள் பாதிக்கப்படுவாா்கள். தற்போதுள்ள அதிகபட்ச யூனிட் கட்டணம் ரூ.5 என்ற நிலைமை மாறிவிடும். பாஜக ஆளும் மாநிலங்களில் ஏன் மின் துறையை தனியாா்மயமாக்கவில்லை.

புதுவையில் மக்களுக்கு எதிரான மத்திய அரசின் திட்டங்களை புகுத்துகின்றனா். மின் துறை ஊழியா்கள் போராட்டத்துக்கு மதச் சாா்பற்ற கூட்டணி ஆதரவாக இருக்கும்.

மதச் சாா்பின்மையை கடைப்பிடிப்பதாக பதவி பிரமாணம் செய்து கொண்ட புதுவை அமைச்சா்கள், எம்எல்ஏக்கள் ஆா்எஸ்எஸ் பேரணியில் கலந்து கொண்டுள்ளனா் என்றாா் வே.நாராயணசாமி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com