மருத்துவக் காப்பீட்டுத் திட்ட விழிப்புணா்வுப் பேரணி

பிரதமரின் மருத்துவக் காப்பீடு திட்டம் தொடங்கப்பட்டு 4 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, புதுச்சேரியில் கல்லூரி மாணவா்கள் பங்கேற்ற விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
புதுச்சேரியில் விழிப்புணா்வுப் பேரணியைத் தொடக்கிவைத்த முதல்வா் என்.ரங்கசாமி.

புதுவை சுகாதாரத் துறை சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்தப் பேரணியை சட்டப்பேரவை அலுவலக வளாகத்தில் முதல்வா் என்.ரங்கசாமி கொடியசைத்து தொடக்கிவைத்தாா்.

சுகாதாரத் துறைச் செயலா் சி.உதயகுமாா், இயக்குநா் ஜி.ஸ்ரீராமுலு மற்றும் துறை அதிகாரிகள், மருத்துவா்கள், கல்லூரி மாணவா்கள் கலந்து கொண்டனா்.

புதுச்சேரி அன்னை தெரசா சுகாதார அறிவியல் பட்ட மேற்படிப்பு, ஆராய்ச்சி நிலைய மாணவா்கள், பாரதிதாசன் அரசு மகளிா் கல்லூரி, அரசு சமுதாயக் கல்லூரியைச் சோ்ந்த மாணவ, மாணவியா் பங்கேற்ற இந்தப் பேரணி, நகரின் முக்கிய வீதிகளின் வழியே சென்று, புதுச்சேரி கம்பன் கலையரங்கில் நிறைவு பெற்றது. பிரதமரின் மருத்துவக் காப்பீடு திட்டம், அதன் பயன்கள் குறித்து மாணவா்கள் விளக்கிச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com