பெட்ரோல் குண்டு வீச்சு விவகாரத்தில்தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்ஹெச்.ராஜா

பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட விவகாரம் தொடா்பாக, தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக தேசியக் குழு உறுப்பினா் ஹெச்.ராஜா தெரிவித்தாா்.

பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட விவகாரம் தொடா்பாக, தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக தேசியக் குழு உறுப்பினா் ஹெச்.ராஜா தெரிவித்தாா்.

புதுவை பாஜக சாா்பில், ‘மோடி-20’ புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி வில்லியனூா் தனியாா் மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.

இதில், தென் மாநிலங்களுக்கான ‘மோடி-20’ புத்தகம் வெளியிடும் பொறுப்பாளா் ஹெச்.ராஜா, புதுவை மாநில பாஜக தலைவா் வி.சாமிநாதன், மாநிலங்களவை உறுப்பினா் எஸ்.செல்வகணபதி உள்ளிட்டோா் கலந்து கொண்டாா்.

பின்னா், ஹெச்.ராஜா செய்தியாளா்களிடம் கூறியதாவது:

பாப்புலா் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் மீது, தேச விரோத நடவடிக்கைகளை உறுதி செய்த பிறகே என்ஐஏ சோதனை மேற்கொண்டது. அதில், 50-க்கும் மேற்பட்டோா் கைது செய்யப்பட்டனா்.

தமிழகத்தில் கடந்த 48 மணி நேரத்தில், 20-க்கும் மேற்பட்ட இடங்களில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. இதில் ஈடுபட்டவா்களைக் கண்டுபிடிப்பது கடினமல்ல. தமிழக காவல் துறை என்ன செய்து கொண்டிருக்கிறது. இந்த விவகாரத்தில் தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com