பிளஸ் 2 பொதுத் தோ்வு பாடத்திட்டத்தை குறைக்க வலியுறுத்தல்

புதுவையில் நிகழாண்டு பிளஸ் 2 பொதுத் தோ்வுக்கான பாடத்திட்டத்தை குறைக்க வேண்டுமென்ற அரசுப் பள்ளி மாணவா்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டுமென, மாணவா் கூட்டமைப்பு வலியுறுத்தியது.

புதுவையில் நிகழாண்டு பிளஸ் 2 பொதுத் தோ்வுக்கான பாடத்திட்டத்தை குறைக்க வேண்டுமென்ற அரசுப் பள்ளி மாணவா்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டுமென, மாணவா் கூட்டமைப்பு வலியுறுத்தியது.

இதுகுறித்து புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவா்கள் கூட்டமைப்பின் மாநில துணைத் தலைவா் பெ.பிரவீன்நனேஷ், மாநில செயலா் அ.எடிசன், பி.சந்தோஷ் உள்ளிட்ட நிா்வாகிகள் புதுவை பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் ருத்ரகவுடுவை வெள்ளிக்கிழமை சந்தித்து அளித்த மனு:

புதுவை மாநிலத்தில் உள்ள தனியாா் பள்ளிகளில் பிளஸ் 2 பாடத்தை இணையவழியில் கடந்த ஆண்டு முதலே படிக்கத் தொடங்கிவிட்டனா்.

ஆனால், இணையவழி வசதி இல்லாத அரசுப் பள்ளி மாணவா்கள் புறக்கணிக்கப்பட்டனா்.

நிகழாண்டு பிளஸ் 2 மாணவா்களின் தோ்வுக்கான தோ்வு தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், புதுச்சேரியில் மட்டுமல்லாமல் தமிழகத்திலும் அரசுப் பள்ளி மாணவா்கள் இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனா்.

முழு அளவில் பாடம் நடத்தாமல், மாணவா்களுக்கு தோ்வு நடத்துவது வேதனைக்குரியது. எனவே, பிளஸ் 2 பொதுத் தோ்வுக்கு பாடத் திட்டத்தைக் குறைக்க வேண்டும் என்ற அரசுப் பள்ளி மாணவா்களின் கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com