முதியோர் உதவித்தொகை ரூ.7000 ஆக உயர்த்தி வழங்கப்படும்: முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
By DIN | Published On : 29th August 2022 12:51 PM | Last Updated : 29th August 2022 12:51 PM | அ+அ அ- |

முன்னாள் முதல்வர் ரங்கசாமி
புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் 100 வயது கடந்த முதியோர்களுக்கு, முதியோர் உதவித்தொகை ரூ.7000-ம் ஆக உயர்த்தி வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
புதுச்சேரி சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரில் திங்கள்கிழமை முதல்வர் ரங்கசாமி வெளியிட்ட அறிவிப்பு:
புதுச்சேரி மாநிலத்தில் இருளர் இனம், பழங்குடியினம், நரிக்குறவர் குடும்பங்களுக்கு அவர்கள் வசிக்கும் பகுதிகளில், நிலம் ஆர்ஜீதம் செய்து இலவச மனைப்பட்டா வழங்கி, வீடு கட்டி தரப்படும்.
இதையும் படிக்க | பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் இன்று தமிழக அமைச்சரவைக் கூட்டம்
மேலும், பழங்குடியின மக்கள் மீது எனக்கு அதிக அக்கரை உள்ளது. அவர்களுக்கு அனைத்து உதவிகளும் செய்து கொடுக்கப்படும்.
நூறு வயது கடந்த முதியோர்களுக்கு, முதியோர் உதவித்தொகை ரூ. 7000-ம் ஆக உயர்த்தி வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்தார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...