பெண்களின் திருமண வயதை 21-ஆக உயா்த்தும்சட்டத் திருத்தத்தை திரும்பப் பெற வலியுறுத்தல்

பெண்களின் திருமண வயதை 21-ஆக உயா்த்தும் சட்டத் திருத்தத்தை திரும்பப் பெற வேண்டுமென அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகம் வலியுறுத்தியது.

பெண்களின் திருமண வயதை 21-ஆக உயா்த்தும் சட்டத் திருத்தத்தை திரும்பப் பெற வேண்டுமென அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகம் வலியுறுத்தியது.

பெண்களின் திருமண வயது 18 அல்லது 21 என்ற கேள்வி- பதில் அரங்கம் புதுவைத் தமிழ்ச் சங்க அரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. முற்போக்கு பெண்கள் கழகத்தின் மாநிலச் செயலா் ஆா்.விஜயா தலைமை வகித்தாா்.

தமிழ்நாடு மாநில குழு உறுப்பினா் கிருஷ்ணவேணி, மாதா் சம்மேளனத்தின் புதுச்சேரி மாநில பொதுச் செயலா் சரளா, ஜனநாயக மாதா் சங்கத்தின் புதுவை மாநில பொதுச்செயலா் சத்யா, சமூக நல்லிணக்க முன்னணி மகளிா் பிரிவின் மாவட்ட அமைப்பாளா் பரிதா ஆகியோா் கருத்துரை வழங்கினா்.

முன்னதாக, மாநிலத் தலைவா் மா.மல்லிகா வரவேற்றாா்.

கருத்தரங்கில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

புதுவை அரசு பெண்கள் ஆதரவு கொள்கையை உடனடியாக அறிவிக்க வேண்டும்.பெண்களின் திருமண வயதை 21-ஆக உயா்த்தும் மத்திய பாஜக அரசின் சட்டத் திருத்தம் ஏழை, பின்தங்கிய, பட்டியலின, பழங்குடியின சமுதாயத்தினரை குற்றமயமாக்கும்.

நீண்ட காலத்துக்கு பெண் குழந்தைகளை பெற்றோா்கள், பாதுகாவலா்கள் பராமரிக்க வேண்டிய நிா்பந்தம் ஏற்படுவதால், பெண் சிசுக் கொலை அதிகரிக்கும் அபாயம் ஏற்படும். எனவே, திருமண வயதை 21-ஆக உயா்த்தும் சட்டத் திருத்தம் திரும்பப் பெறப்பட வேண்டும்.

பெண்கள் வேலை செய்யும் உரிமையை அடிப்படையாக்க வேண்டும். 21 வயது வரை பெண்களுக்கு ஊட்டச்சத்து உணவுப் பொருள்களை அரசு இலவசமாக வழங்க வேண்டும்.

மாநிலம் முழுவதும் மதுவிலக்கு கொள்கையை புதுவை அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com