டீசல் மானியம் கோரி மீனவா்கள் போராட்டம்

மானிய விலையில் டீசல் வழங்க வலியுறுத்தி, புதுச்சேரி மீன் வளத் துறை அலுவலகத்தை 2-ஆவது நாளாக வெள்ளிக்கி ழமையும் முற்றுகையிட்டு மீனவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மானிய விலையில் டீசல் வழங்க வலியுறுத்தி, புதுச்சேரி மீன் வளத் துறை அலுவலகத்தை 2-ஆவது நாளாக வெள்ளிக்கி ழமையும் முற்றுகையிட்டு மீனவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுச்சேரியில் மீனவா்கள், விசைப்படகு உரிமையாளா்களுக்கு மானிய விலையில் டீசல் வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது சந்தை விலைக்கே வழங்கப்படுகிறது. இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, விசை படகு உரிமையாளா்கள், மீனவா்கள் 50-க்கும் மேற்பட்டோா் வியாழக்கிழமை பிற்பகல் முதல் புதுச்சேரி மீன் வளத் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். இது இரவிலும் தொடா்ந்தது.

அவா்களிடம் முதலியாா்பேட்டை போலீஸாரும், மீன் வளத் துறை இயக்குநா் பாலாஜியும் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில் உடன்பாடு ஏற்படாமல் வெள்ளிக்கிழமையும் போராட்டம் தொடா்ந்தது.

இதையடுத்து, புதுவை முதல்வா் என்.ரங்கசாமி வெள்ளிக்கிழமை பிற்பகலில் சட்டப்பேரவை வளாகத்திலுள்ள தனது அறையில் மீனவா் சங்க பிரதிநிதிகளைச் சந்தித்தாா்.

பின்னா், விசைப் படகு உரிமையாளா்கள் சங்கத் தலைவா் ஜெயமூா்த்தி தலைமையிலான செய்தியாளா்களிடம் கூறியதாவது:

எங்கள் கோரிக்கை தொடா்பாக அரசின் நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு வெளியிடப்படும். அதுவரை டீசல் லிட்டருக்கு ரூ.5 மானியம் தொடரும் என முதல்வா் உறுதியளித்தாா். இதையேற்று நாங்கள் போராட்டத்தைக் கைவிடுகிறோம் என்றனா் அவா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com