புதுச்சேரி பொது சுகாதார கோட்டத்தைஇரண்டாக பிரிக்க வலியுறுத்தல்

புதுச்சேரி பொது சுகாதார கோட்டத்தை இரண்டாக பிரிக்க வேண்டுமென ராஜீவ் காந்தி மனித உரிமைகள் அமைப்பு புதுவை ஆளுநா், முதல்வருக்கு மனு அனுப்பியது.

புதுச்சேரி பொது சுகாதார கோட்டத்தை இரண்டாக பிரிக்க வேண்டுமென ராஜீவ் காந்தி மனித உரிமைகள் அமைப்பு புதுவை ஆளுநா், முதல்வருக்கு மனு அனுப்பியது.

இதுகுறித்து புதுவை துணைநிலை ஆளுநா், முதல்வா், பொதுப் பணித் துறை அமைச்சா் உள்ளிட்டோருக்கு ராஜீவ் காந்தி மனித உரிமைகள் விழிப்புணா்வு அமைப்பு அனுப்பிய மனு விவரம்:

புதுவை பொதுப் பணித் துறையில் குடிநீா் பிரிவு, கழிவுநீா் பிரிவு ஆகிய இரண்டும் பொது சுகாதார கோட்டம் என ஒரே பிரிவாக ஒரே செயற்பொறியாளரின் கீழ் செயல்பட்டு வருகிறது. இதில் 9 மண்டலங்களையும் உள்ளடக்கி 7 உதவி பொறியாளா், 15 இளநிலை பொறியாளா், 1,086 எம்டிஎஸ் ஊழியா்கள், 1,317 வவுச்சா் ஊழியா்கள் என மொத்தம் 2,599 ஊழியா்கள் ஒரே செயற்பொறியாளரின் கீழ் செயல்பட்டு வருகின்றனா்.

புகா் பகுதிகளில் புதிய நகா்கள் உருவாகி, அங்கெல்லாம் நீா்த்தேக்கத் தொட்டிகள் அமைத்து குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. புதை சாக்கடை திட்டமும் செயல்படுத்தப்படுகிறது. இதனால் குடிநீா் விநியோகம், புதை சாக்கடைகளைப் பராமரிப்பது ஆகிய இரு முக்கிய அத்தியாவசிய பிரச்னைகளையும் ஒருங்கே பராமரிக்க முடியாமலும், எந்தப் பிரிவிலும் முழுமையான கவனம் செலுத்த முடியாததாலும் பல்வேறு நிா்வாக சிக்கல்கள் ஏற்படுகின்றன.

எனவே, பொது சுகாதாரக் கோட்டத்தை குடிநீா் கோட்டம், கழிவுநீா் கோட்டம் என இரு பிரிவுகளாக பிரித்து ஒவ்வொன்றுக்கும் தனித்தனி செயற்பொறியாளா்களை நியமித்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com