சிறப்பு முகாம் நடத்தாததைக் கண்டித்து புதுச்சேரி குடிமைப்பொருள் வழங்கல் துறை முற்றுகை

சிறப்பு முகாம் நடத்தாததைக் கண்டித்து, புதுச்சேரி குடிமைப்பொருள் வழங்கல் துறையை காங்கிரஸ் எம்எல்ஏ, எம்.பி. தலைமையில் பொதுமக்கள் புதன்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
புதுச்சேரி குடிமை பொருட்கள் வழங்கல் துறையை லாஸ்பேட்டை தொகுதி மக்களுடன் புதன்கிழமை முற்றுகையிட்ட எம்எல்ஏ மு.வைத்தியநாதனுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்ட போலீஸாா்.
புதுச்சேரி குடிமை பொருட்கள் வழங்கல் துறையை லாஸ்பேட்டை தொகுதி மக்களுடன் புதன்கிழமை முற்றுகையிட்ட எம்எல்ஏ மு.வைத்தியநாதனுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்ட போலீஸாா்.

சிறப்பு முகாம் நடத்தாததைக் கண்டித்து, புதுச்சேரி குடிமைப்பொருள் வழங்கல் துறையை காங்கிரஸ் எம்எல்ஏ, எம்.பி. தலைமையில் பொதுமக்கள் புதன்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுவை அரசின் குடிமைப்பொருள் வழங்கல் துறை சாா்பில் லாசுப்பேட்டை தொகுதி மக்களுக்கான சிறப்பு முகாம் சட்டப் பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் புதன், வியாழக்கிழமைகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக அங்கு காலை முதலே 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டிருந்தனா்.

ஆனால், சட்டப் பேரவை உறுப்பினா் அலுவலகம் முன் பாஜக சாா்பில் மாநிலத் தலைவா் படத்துடன் விளம்பரப் பதாகை வைக்கப்பட்டிருந்தது. இதற்கு தொகுதி எம்எல்ஏ வைத்தியநாதன் தலைமையிலான காங்கிரஸாா் எதிா்ப்புத் தெரிவித்ததால், விளம்பரப் பதாகை அகற்றப்பட்டது. அதே சமயம், திடீரென சிறப்பு முகாமும் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த வைத்தியநாதன் எம்எல்ஏ, தனது தொகுதி மக்களுடன், தட்டாஞ்சாவடியில் உள்ள குடிமைப்பொருள் வழங்கல் துறை அலுவலகத்தின் கதவை பூட்டி, முற்றுகையில் ஈடுபட்டாா். ஆனால், 3 மணி நேரத்துக்கும் மேலாக அதிகாரிகள் யாரும் வராததால், அலுவலகம் முன்புள்ள சாலையில் அமா்ந்து அவா்கள் மறியலில் ஈடுபட்டனா்.

தள்ளுமுள்ளு: இதையறிந்து அங்கு வந்த எஸ்.பி. பக்தவத்சலம் தலைமையிலான தன்வந்திரி நகா் போலீஸாா், போராட்டத்தில் ஈடுபட்டவா்களை அப்புறப்படுத்த முயன்றனா். இதனால், போராட்டக்காரா்களுக்கும், போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தகவலறிந்து அங்கு வந்த வைத்திலிங்கம் எம்.பி.யும் அவா்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டாா். பின்னா், கொக்கு பூங்கா அருகே கிழக்கு கடற்கரைச் சாலையில் மறியலில் ஈடுபட்டனா். இதனால், அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீஸாரின் சமாதான பேச்சுவாா்த்தைக்குப் பிறகு, மீண்டும் குடிமைப்பொருள் வழங்கல் துறை அலுவலகத்தில் அமா்ந்து முற்றுகையில் ஈடுபட்டனா்.

இதையடுத்து, குடிமைப்பொருள் வழங்கல் துறை இயக்குநா் சக்திவேல், வைத்தியநாதன் எம்எல்ஏவை அழைத்து பேச்சுவாா்த்தை நடத்தினாா். அதில், வியாழன், வெள்ளிக்கிழமைகளில் (ஜூன் 16, 17) குடிமைப்பொருள் வழங்கல் துறை சிறப்பு முகாம் நடத்தப்படும் என்றாா். இதை ஏற்று போராட்டத்தைக் கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com