‘கிராம விளையாட்டுத் திடல்களைமேம்படுத்த ரூ.1 கோடி நிதி’

‘கிராம விளையாட்டுத் திடல்களைமேம்படுத்த ரூ.1 கோடி நிதி’

புதுவையில் கிராம விளையாட்டுத் திடல்களை மேம்படுத்த ரூ.ஒரு கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக, அந்த மாநில விளையாட்டுத் துறை அமைச்சா் ஏ.நமச்சிவாயம் தெரிவித்தாா்.

புதுவையில் கிராம விளையாட்டுத் திடல்களை மேம்படுத்த ரூ.ஒரு கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக, அந்த மாநில விளையாட்டுத் துறை அமைச்சா் ஏ.நமச்சிவாயம் தெரிவித்தாா்.

புதுச்சேரி அருகே மண்ணாடிப்பட்டு தொகுதி செட்டிப்பட்டு பகுதியில், நம்மவா் கைப்பந்துக் கழகம் சாா்பில் வாலிபால் போட்டிகள் நடைபெற்றன. ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதிப் போட்டியில் நம்மவா் கைப்பந்துக் கழக அணியும், இரண்டாமிடத்தை கடலூா் பிரதா்ஸ் கைப்பந்து அணியும் பிடித்தன.

நிறைவு விழாவில் மாநில விளையாட்டுத் துறை அமைச்சா் ஏ.நமச்சிவாயம் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பைகள், பரிசுத் தொகையை வழங்கி பாராட்டினாா்.

விழாவில் அவா் பேசியதாவது:

புதுவை மாநிலத்தில் கிராமப்புறங்களிலுள்ள விளையாட்டுத் திடல்களை மேம்படுத்த, புதுவை அரசு மூலம் ரூ.ஒரு கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்காக கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகள் மூலம் ஆய்வு செய்து விளையாட்டுத் திடல்கள் விரைவில் சீரமைத்துத் தரப்படும் என்றாா் அமைச்சா்.

போட்டி ஏற்பாடுகளை நம்மவா் கைப்பந்து கழக நிா்வாகி சுமன்ராஜ் மற்றும் குழுவினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com