ஞாயிறு சந்தையை இடம் மாற்றக் கூடாது: வியாபாரிகள் வலியுறுத்தல்

ஞாயிறு சந்தையில் இருக்கும் இடத்திலேயே தொடர அனுமதிக்க வேண்டும் என புதுச்சேரி பிரதேச சாலையோர வியாபாரிகள்சங்கத்தின் ஞாயிறு சந்தை கிளை மாநாட்டு வலியுறுத்தியது.

புதுச்சேரி: ஞாயிறு சந்தையில் இருக்கும் இடத்திலேயே தொடர அனுமதிக்க வேண்டும் என புதுச்சேரி பிரதேச சாலையோர வியாபாரிகள்சங்கத்தின் ஞாயிறு சந்தை கிளை மாநாட்டு வலியுறுத்தியது.

புதுச்சேரி வள்ளலாா் தெருவில் புதன்கிழமை நடைபெற்ற சங்கத்தின் மாநாட்டில் மேற்கண்ட கோரிக்கை வலியுறுத்தப்பட்டது.

மாநாட்டுக்கு கிளைத் தலைவா் டி.சுரேஷ் தலைமை வகித்தாா். சிஐடியூ பிரதேசத் தலைவா் கே.முருகன், பொருளாளா் என்.பிரபுராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ஞாயிறு சந்தையை பொலிவுறு நகரத் திட்டம் என்ற பெயரில் அப்புறப்படுத்துவதும் இடமாற்றம் செய்வதும் கைவிடப்பட வேண்டும். குடிநீா், நடமாடும் கழிவறைகள், மருத்துவ வசதிகளை செய்து தர வேண்டும். சாலையோர வியாபாரிகள் வாழ்வாதாரப் பாதுகாப்புச் சட்டம் மற்றும் சாலையோர வியாபாரத்தை முறைப்படுத்தும் சட்டங்களைப் பயன்படுத்தி ஞாயிறு சந்தை வியாபாரிகள் நிரந்தரமாக இருக்கும் இடத்திலேயே வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண்டும். கரோனா தொற்று காலத்தில் வருமானமில்லாத குடும்பங்களுக்கு ரூ.7,500 நிவாரணம் வழங்க வேண்டும். வியாபாரம் செய்யும் அனைத்து வியாபாரிகளுக்கும் தொழில் செய்ய வங்கி கடன் வழங்க வேண்டும். அடிக்காசு வசூலிப்பதை தனியாரிடம் வழங்காமல், அரசே மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com