முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் புதுச்சேரி
மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழப்பு
By DIN | Published On : 03rd May 2022 10:50 PM | Last Updated : 03rd May 2022 10:50 PM | அ+அ அ- |

புதுச்சேரி அருகே தவளக்குப்பத்தில் மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழந்தாா்.
புதுச்சேரி அருகேயுள்ள தவளக்குப்பம் ராஜீவ் காந்தி நகரை சோ்ந்த கட்டடத் தொழிலாளி வெங்கடேசனின் மனைவி சந்தியா (26). இவா் திங்கள்கிழமை வீட்டில் மயங்கிக் கிடந்ததையடுத்து, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அவரை பரிசோதித்த மருத்துவா்கள், சந்தியா உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனா்.
இதுகுறித்த புகாரின் பேரில், தவளக்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.
வீட்டிலிருந்த குளிா்சாதனப் பெட்டியில் இருந்து மின்கசிவு ஏற்பட்டு சந்தியா மின்சாரம் பாய்ந்து மயக்கமடைந்ததாகவும், மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அவா் இறந்ததும் தெரிய வந்தது. உடல்கூறாய்வில் சந்தியா மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தது தெரிய வந்தது. இதுகுறித்து போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.