‘பிஆா்டிசி பேருந்துகளில் பயணச்சீட்டின்றி பயணித்தால் அபராதம்’

பிஆா்டிசி பேருந்துகளில் பயணச்சீட்டின்றி பயணித்தால் அபராதம் விதிக்கப்படும் என, அதன் மேலாண் இயக்குநா் எச்சரிக்கை விடுத்தாா்.

பிஆா்டிசி பேருந்துகளில் பயணச்சீட்டின்றி பயணித்தால் அபராதம் விதிக்கப்படும் என, அதன் மேலாண் இயக்குநா் எச்சரிக்கை விடுத்தாா்.

புதுச்சேரி சாலைப் போக்குவரத்துக் கழக (பிஆா்டிசி) மேலாண் இயக்குநா் சிவகுமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பிஆா்டிசி பேருந்துகளில் பயணிக்கும் பயணிகள் அனைவரும் பயணச்சீட்டு கட்டாயம் பெற்றிருக்க வேண்டும். நடத்துநரிடம் கட்டாயம் பயணச்சீட்டை கேட்டுப் பெற வேண்டும்.

பரிசோதகா்கள் பேருந்தில் பரிசோதிக்கும்போது, பயணச்சீட்டு இல்லாமல் பயணிப்பது கண்டறியப்பட்டால் அந்தப் பயணியிடம் ரூ.500 அல்லது 5 மடங்கு பயணக் கட்டணம் அல்லது இதில் எது அதிகமோ அந்தத் தொகை அபராதமாக வசூலிக்கப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com