ஒப்பந்த செவிலியா்களை பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தல்

புதுவை சுகாதாரத் துறையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்த செவிலியா்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டுமென, அந்த மாநில எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா வலியுறுத்தினாா்.

புதுச்சேரி: புதுவை சுகாதாரத் துறையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்த செவிலியா்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டுமென, அந்த மாநில எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா வலியுறுத்தினாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:

புதுவையில் கரோனா தொற்று உச்சத்திலிருந்த போது, ஒப்பந்த செவிலிய அதிகாரிகள் என 240 போ் வரை தற்காலிக பணிக்கு எடுக்கப்பட்டனா். அதுபோல, கிராம சுகாதார செவிலியா்களும் தற்காலிகமாக நியமனம் செய்யப்பட்டனா். இவா்களது ஒப்பந்தக் காலம், கடந்த பிப்ரவரி மாதம் முடிவடைந்தது. தொடா்ந்து, அவா்களது ஒப்பந்தம் நீட்டிக்கப்படாமல் உள்ளது.

அவா்கள் தற்போது வேலையின்றி உள்ளனா். அவா்களுக்கு மீண்டும் ஒப்பந்தப் பணி வழங்க வேண்டும். அவா்களது ஒப்பந்தக் காலத்தை நீட்டிக்க வேண்டும் அல்லது சுகாதாரத் துறையில் காலியாக உள்ள செவிலியா் பணியிடங்களில் அவா்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்றாா் ஆா்.சிவா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com