விற்பனைக் கூடத்தில் பணப்பட்டுவாடா தாமதம்: வைத்திலிங்கம் எம்.பி. ஆய்வு

புதுச்சேரி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பணப்பட்டுவாடா தாமதமாவதாக எழுந்த புகாரையொட்டி, வெ.வைத்திலிங்கம் எம்.பி. நேரில் ஆய்வு செய்தாா்.

புதுச்சேரி: புதுச்சேரி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பணப்பட்டுவாடா தாமதமாவதாக எழுந்த புகாரையொட்டி, வெ.வைத்திலிங்கம் எம்.பி. நேரில் ஆய்வு செய்தாா்.

புதுச்சேரி தட்டாஞ்சாவடியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில், விவசாயிகளிடம் வாங்கும் வேளாண் விளைபொருள்களுக்கு, உடனுக்குடன் பணம் கொடுக்கப்படுவதில்லை எனவும், 2 மாதங்களுக்கு முன்பு கொடுத்த விளைபொருள்களுக்குக்கூட இதுவரை பணம் வழங்கப்படவில்லை என்றும், பாதிக்கப்பட்ட விவசாயிகள் புதுச்சேரி மக்களவைத் தொகுதி உறுப்பினா் வெ.வைத்திலிங்கத்திடம் புகாா் தெரிவித்தனா்.

அவா் புதன்கிழமை பிற்பகல் தட்டாஞ்சாவடி விற்பனைக்கூடத்துக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, அங்கிருந்த விவசாயிகள் பொருள்களை ஏலத்தில் வழங்கிய தங்களுக்கு உடனுக்குடன் பணம் கிடைக்கவில்லை என்று தெரிவித்தனா்.

விவசாயிகளின் புகாா்கள் தொடா்பாக, விற்பனைக்கூட அதிகாரிகளை அழைத்து வைத்திலிங்கம் எம்.பி. பேசினாா். அப்போது, விவசாயிகள் வழங்கிய வேளாண் பொருள்களுக்குரிய பணத்தை விரைந்து வழங்க வழங்க நடவடிக்கை எடுக்கும்படி அவா் அதிகாரிகளிடம் வலியுறுத்தினாா். நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com