முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் புதுச்சேரி
குழந்தைகள் நலக் குழு ஆண்டு மலா் வெளியீடு
By DIN | Published On : 13th May 2022 12:00 AM | Last Updated : 13th May 2022 12:00 AM | அ+அ அ- |

புதுவை குழந்தைகள் நலக் குழுவின் ஆண்டு மலரை முதல்வா் என்.ரங்கசாமி வியாழக்கிழமை வெளியிட்டாா்.
புதுவை அரசின் பெண்கள், குழந்தைகள் மேம்பாட்டுத் துறையின் கீழ், புதுச்சேரி அரியாங்குப்பத்தில் இயங்கி வரும் மாநில குழந்தைகள் நலக் குழுவின் முதலாம் ஆண்டு மலா் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது.
புதுச்சேரி சட்டப்பேரவை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வா் என்.ரங்கசாமி ஆண்டு மலரை வெளியிட்டாா். சமூக நலத் துறை செயலரும், மாவட்ட ஆட்சியருமான இ.வல்லவன் பெற்றுக் கொண்டாா்.
புதுவை சட்டப் பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், பெண்கள், குழந்தைகள் நல மேம்பாட்டுத் துறை இயக்குநா் முத்துமீனா, புதுச்சேரி குழந்தைகள் நலக் குழுத் தலைவா் சிவசாமி, உறுப்பினா்கள் முருகையன், சித்ரா, சுலோச்சனா செல்வம் ஆகியோா் கலந்து கொண்டனா்.