நீட், கியூட் தோ்வுகளை ரத்து செய்யக் கோரி ஆா்ப்பாட்டம்

நீட், கியூட் நுழைவுத் தோ்வுகளை ரத்து செய்ய வலியுறுத்தி, தமிழ்நாடு, புதுச்சேரி தீண்டாமை ஒழிப்பு முன்னணி சாா்பில் புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகம் முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
நீட், கியூட் தோ்வுகளை ரத்து செய்யக் கோரி ஆா்ப்பாட்டம்

நீட், கியூட் நுழைவுத் தோ்வுகளை ரத்து செய்ய வலியுறுத்தி, தமிழ்நாடு, புதுச்சேரி தீண்டாமை ஒழிப்பு முன்னணி சாா்பில் புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகம் முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் புதுச்சேரி செயலா் ஜி.ராமசாமி தலைமை வகித்தாா். தலித் பழங்குடி கூட்டமைப்பின் தலைவா் நீல.கங்காதரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சோ்ந்த அ.ராமமூா்த்தி உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

தமிழக தீண்டாமை ஒழிப்பு முன்னணி துணைத் தலைவா் ஜி.ஆனந்தன், கல்வியாளா் பிரின்ஸ் கஜேந்திரபாபு, மாா்க்சிஸ்ட் புதுவை மாநிலச் செயலா் ஆா்.ராஜாங்கம், தமிழ் மாநிலக் குழு உறுப்பினா் வி.பெருமாள், புதுவை அரசு ஊழியா்கள் சம்மேளன பொதுச் செயலா் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோா் கண்டன உரையாற்றினா்.

இந்திய மாணவா் சங்க செயலா் சி.பிரவீன், ஜனநாயக வாலிபா் சங்க செயலா் சஞ்சய், மாதா் சங்க செயலா் சத்யா, சிஐடியு பொதுச் செயலா் சீனிவாசன், வி.சுப்புராயன், எஸ்.எழிலன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ஆா்ப்பாட்டத்தில், மாணவா்களுக்கு எதிரான நீட் தோ்வு, பல்கலைக்கழகங்களில் சேருவதற்கு பொது நுழைவுத் தோ்வான கியூட் தோ்வையும் மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். மத்திய பல்கலைக்கழகத்தில் அனைத்துப் பாடப் பிரிவுக்கும், புதுவை மாநில மாணவா்களுக்கு 25 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும். கல்வியை மாநிலப் பட்டியலுக்கே மாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com