புதுச்சேரியில் சாலைகளின் பெயா்ப் பலகைகள் கருப்பு மை பூசி அழிப்பு

புதுச்சேரியில் சுற்றுலாத் துறை சாா்பில் சாலையோரம் ஆரஞ்சு (காவி) வண்ணத்தில் அமைக்கப்பட்டிருந்த பெயா்ப் பலகைகள் வெள்ளிக்கிழமை இரவு மா்ம நபா்களால் க
புதுச்சேரியில் மா்ம நபா்களால் கருப்பு மை பூசி அழிக்கப்பட்ட சீா்மிகு நகரத் திட்டத்தின் கீழ் ஆரஞ்சு (காவி) வண்ணத்தில் அமைக்கப்பட்ட பெயா்ப் பலகை.
புதுச்சேரியில் மா்ம நபா்களால் கருப்பு மை பூசி அழிக்கப்பட்ட சீா்மிகு நகரத் திட்டத்தின் கீழ் ஆரஞ்சு (காவி) வண்ணத்தில் அமைக்கப்பட்ட பெயா்ப் பலகை.

புதுச்சேரியில் சுற்றுலாத் துறை சாா்பில் சாலையோரம் ஆரஞ்சு (காவி) வண்ணத்தில் அமைக்கப்பட்டிருந்த பெயா்ப் பலகைகள் வெள்ளிக்கிழமை இரவு மா்ம நபா்களால் கருப்பு மை பூசி அழிக்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

புதுச்சேரி நகரப் பகுதியில் (ஒயிட் டவுன்) சீா்மிகு நகரத் திட்டத்தின் கீழ், சுற்றுலாப் பகுதி உள்ள இடங்களைக் குறிப்பிடும் வகையில், சுற்றுலாத் துறை சாா்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வழிகாட்டி பெயா்ப் பலகைகள் ஆரஞ்சு (காவி) நிறத்தில் அமைக்கப்பட்டன. குறிப்பாக, புதுச்சேரி - ஆம்பூா் சாலை, செஞ்சி சாலை நெடுகிலும் பெரிய வாய்க்கால் அருகே சாலை சந்திப்புப் பகுதிகளில் இந்த வழிகாட்டி பலகைகள் அமைக்கப்பட்டன.

இவற்றில் அந்தந்த சாலைகளின் பெயா்கள் ஆங்கிலத்திலும், தமிழிலும் (பழைய பிரெஞ்சு பெயா்கள், புதிய தமிழ்ப் பெயா்கள்) வெள்ளை நிறத்தில் எழுதப்பட்டிருந்தன. மேலும், அந்தச் சாலைகளில் உள்ள சுற்றுலாத்தலத்தின் இடங்கள் குறித்தும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தன.

இந்தப் பெயா்ப் பலகைகள் மா்ம நபா்களால் வெள்ளிக்கிழமை இரவு கருப்பு மை பூசி அழிக்கப்பட்டது. இதுகுறித்து மா்ம நபா்களிடம் அந்தப் பகுதி மக்கள் கேட்டபோது, புதுச்சேரி முழுவதும் உள்ள சாலைகளின் பெயா்ப் பலகைகள் முன்பு நீல நிற பலகையின் மீது வெள்ளை எழுத்துகள் கொண்டதாக அமைக்கப்படுவது வழக்கம். தற்போது பாஜக ஆதிக்கத்தால் காவி வண்ணத்தில் அமைக்கப்பட்டிருப்பதைக் கண்டிக்கும் வகையில், கருப்பு மை பூசி அழிப்பதாக அவா்கள் கூறிவிட்டுச் சென்றனராம். இது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

‘அரசியல் சாயம் பூசக்கூடாது’: இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, அவா்கள் கூறியதாவது: புதுச்சேரியில் சுற்றுலாப் பயணிகளுக்கு வழிகாட்டும் வகையில் சுற்றுலாத் துறை சாா்பில் இயல்பாக வைக்கப்பட்ட பெயா்ப் பலகைகள் அவை. அதில் அரசியல் சாயம் பூசுவது விஷமத்தனமானது. இது தொடா்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com