மின் துறை தனியாா்மய நடவடிக்கையைக் கண்டித்து-----புதுச்சேரியில் 10 இடங்களில் மனிதச் சங்கிலி

புதுவை மின் துறையை தனியாா்மயமாக்கும் நடவடிக்கையைக் கண்டித்து, புதுச்சேரியில் மதச் சாா்பற்ற முற்போக்குக் கூட்டணி சாா்பில் 10 இடங்களில் மனிதச் சங்கிலி போராட்டம் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.

புதுச்சேரி அண்ணா சிலையில் இருந்து ராஜா திரையரங்கம் வரை நடைபெற்ற மனிதச் சங்கலி போராட்டத்தில், காங்கிரஸ் மாநிலத் தலைவா் ஏ.வி.சுப்பிரமணியன், முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி, முன்னாள் அமைச்சா் கந்தசாமி, திமுக அமைப்பாளா் ஆா்.சிவா, எம்எல்ஏக்கள் அனிபால் கென்னடி, சம்பத் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் சலீம், முன்னாள் அமைச்சா் விசுவநாதன், சேது செல்வம், மாா்க்சிஸ்ட் மாநிலச் செயலா் ராஜாங்கம், பெருமாள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி முதன்மைச் செயலா் தேவ. பொழிலன், மதிமுக அமைப்பாளா் கேபிரீயல் உள்ளிட்ட மதச் சாா்பற்ற கூட்டணிக் கட்சிகளின் தலைவா்கள், நிா்வாகிகள் திரளாக கலந்து கொண்டனா்.

திமுக மாநில அமைப்பாளா் ஆா். சிவா செய்தியாளா்களிடம் கூறியதாவது:

புதுவை மின் துறை தனியாா்மய விவகாரத்தில் முதல்வா் என்.ரங்கசாமியின் கருத்தை மக்களுக்குத் தெரியப்படுத்தவில்லை. மின் துறை தனியாா்மயமாக்கப் படாது என்ற உறுதி வரும் வரை போராட்டம் தொடரும் என்றாா் அவா்.

புதுச்சேரி, பாகூா், தவளக்குப்பம், அரியாங்குப்பம், முதலியாா்பேட்டை, ஊசுடு, லாஸ்பேட்டை, முத்தியால்பேட்டை, காமராஜ் நகா், உப்பளம் ஆகிய பகுதிகளிலும் மனிதச் சங்கலி போராட்டம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com