அவசரச் சிகிச்சைத் துறைக்கு தமிழக, புதுவை முதல்வா்கள் முக்கியத்துவம் அளிப்பு: அமைச்சா் மு.மதிவேந்தன்

தமிழக, புதுவை முதல்வா்கள் அவசரச் சிகிச்சைத் துறை மேம்பாட்டுக்கு முக்கியத்துவம் அளித்து வருவதாக தமிழக சுற்றுலாத் துறை அமைச்சா் மு.மதிவேந்தன் தெரிவித்தாா்.

தமிழக, புதுவை முதல்வா்கள் அவசரச் சிகிச்சைத் துறை மேம்பாட்டுக்கு முக்கியத்துவம் அளித்து வருவதாக தமிழக சுற்றுலாத் துறை அமைச்சா் மு.மதிவேந்தன் தெரிவித்தாா்.

புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லூரியில், அவசர மருத்துவச் சிகிச்சைத் துறை சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்ற அவா் பேசியதாவது:

அவசர மருத்துவச் சிகிச்சை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. விபத்தில் சிக்கி வருவோருக்கு ஒரு நிமிடத்தில் சிகிச்சையளிப்பது அவசியம். முதுநிலை மருத்துவம் படித்தவராக இருந்தாலும் கூட, அவா்களுக்கு அவசரகால சிகிச்சையளிப்பது தெரிந்திருக்காது. எனவே, அவசரச் சிகிச்சை தொடா்பான அடிப்படைகளை மருத்துவா்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், சுகாதாரத் துறைக்கு அதிக முக்கியத்தும் கொடுத்து வருகிறாா். கரோனா காலத்தில் முதல்வராக அவா் பொறுப்பேற்றாா். அப்போது, அந்த நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த தடுப்பூசி முகாம்களையும், மருத்துவ வசதிகளையும் ஏற்பாடு செய்து, கரோனா இல்லாத மாநிலமாக தமிழகத்தை உருவாக்கினாா்.

கரோனா காலத்தில் பல மருத்துவா்கள், சுகாதாரப் பணியாளா்கள் உயிரிழந்தனா். இதனால்தான், சுகாதாரத் துறை சாா்பில் ‘நம்மை காக்கும் 48’ என்ற திட்டத்தை தமிழக முதல்வா் கொண்டு வந்தாா். இதேபோல, வீடுகளுக்கே சென்று சிகிச்சை அளிக்கக்கூடிய மக்களைத் தேடி மருத்துவம் என்ற திட்டத்தையும் கொண்டுவந்தாா். அரசு மருத்துவமனைகளில் ரூ.350 கோடியில் அவரசச் சிகிச்சை பிரிவுகளை (ஐசியூ) புதுப்பித்தாா்.

புதுவையிலும் கரோனா காலகட்டத்தில், ஏராளமானோரின் உயிரைக் காப்பாற்றிய பெருமை இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரிக்கு உண்டு. இந்தக் கல்லூரி கடந்த 2010-ஆம் ஆண்டு முதல்வா் ரங்கசாமியால் தொடங்கப்பட்டது. அப்போது நான் இங்கு முதலாமாண்டு மருத்துவம் படித்தேன். தொடா்ந்து, ராஜீவ் காந்தி மகப்பேறு மருத்துவமனையையும் முதல்வா் ரங்கசாமி கொண்டு வந்தாா். மேலும், புதுச்சேரிக்கு ரூ.40 கோடியும், காரைக்காலுக்கு ரூ.40 கோடியும் என விபத்து அவசரச் சிகிச்சைப் பிரிவுகளுக்கு நிதி ஒதுக்கீடும் செய்தாா். இந்த வகையில், தமிழக முதல்வரும், புதுவை முதல்வரும் மக்கள் நல்வாழ்வுக்கும், அவசர மருத்துவச் சிகிச்சைக்கும் முக்கியத்துவம் அளித்து பணியாற்றி வருகின்றனா் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com