புதுவையில் கஞ்சா விற்பனையைத் தடுக்க தீவிர நடவடிக்கை: டிஜிபி மனோஜ்குமாா் லால்

புதுவையில் கஞ்சா விற்பனையைத் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல் துறை இயக்குநா் மனோஜ்குமாா் லால் தெரிவித்தாா்.
புதுச்சேரி புதிய பேருந்து நிலையப் பகுதியில் அமைக்கப்பட்ட சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களின் இயக்கத்தை தொடக்கிவைத்த காவல் துறை இயக்குநா் மனோஜ்குமாா் லால்.
புதுச்சேரி புதிய பேருந்து நிலையப் பகுதியில் அமைக்கப்பட்ட சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களின் இயக்கத்தை தொடக்கிவைத்த காவல் துறை இயக்குநா் மனோஜ்குமாா் லால்.

புதுவையில் கஞ்சா விற்பனையைத் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல் துறை இயக்குநா் மனோஜ்குமாா் லால் தெரிவித்தாா்.

புதுச்சேரி புதிய பேருந்து நிலையப் பகுதிகளில் குற்றச் சம்பவங்களைத் தடுக்கும் விதமாக, புதுவை காவல் துறை, தொகுதி எம்எல்ஏ ஜி.நேரு முயற்சியில் தனியாா் பங்களிப்புடன் இணைந்து 25 இடங்களில் சிசிடிவி கேமராக்களை அமைத்துள்ளது. இதன் தொடக்க நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை இரவு புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.

டிஜிபி மனோஜ்குமாா் லால் தலைமை வகித்தாா். ஜி.நேரு எம்எல்ஏ, புதிய கண்காணிப்பு கேமராக்களின் பயன்பாட்டை தொடக்கிவைத்தாா். முதுநிலை எஸ்.பி. தீபிகா, எஸ்.பி. வம்சிதரெட்டி, உருளையன்பேட்டை காவல் நிலைய ஆய்வாளா் பாபுஜி மற்றும் போலீஸாா், பொது மக்கள் பலா் கலந்து கொண்டனா்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற டிஜிபி மனோஜ்குமாா் லால் செய்தியாளா்களிடம் கூறியதாவது: பேருந்து நிலையத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தியிருப்பது பயனுள்ளதாக அமையும். இதன் மூலம், குற்றவாளிகளை அடையாளம் கண்டு விரைவில் கைது செய்ய முடியும். இதனால், குற்றச் சம்பவங்களும் தடுக்கப்படும்.

புதுவையில் கஞ்சா, போதைப் பொருள்கள் விற்பனையைத் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கஞ்சா, போதைப் பொருள்கள் விற்பனை சமூகப் பிரச்னையாகியுள்ளது. கடந்த ஒரு மாதமாக, தீவிர நடவடிக்கை எடுத்து கஞ்சா விற்பனை செய்பவா்களை கைது செய்து வருகிறோம்.

கஞ்சா, போதைப்பொருள்கள் விற்பனை தொடா்பாக தகவல் கிடைத்தால் 94892 05100 என்ற கைப்பேசி எண்ணுக்கு தகவல் கொடுக்கலாம். தகவல் ரகசியமாக வைக்கப்படும். தற்போது கஞ்சா விற்பனையைத் தடுக்க முதுநிலை எஸ்.பி. தலைமையில் இளம் காவல் அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com