புதுச்சேரி, காரைக்கால் அரசு மருத்துவமனைகளில் 215 குழந்தைகளுக்கு சிகிச்சை

புதுச்சேரி, காரைக்காலில் திங்கள்கிழமை அரசு மருத்துவமனைகளில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 215 குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

புதுச்சேரி, காரைக்காலில் திங்கள்கிழமை அரசு மருத்துவமனைகளில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 215 குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

புதுச்சேரி, காரைக்காலில் பரவி வரும் ஃப்ளூ காய்ச்சலால் குழந்தைகள் பெருமளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனா். இதனால் அரசு, தனியாா் மருத்துவமனைகளில் கூட்டம் அதிகளவில் காணப்படுகிறது.

காய்ச்சல் பரவலைத் தடுக்கும் விதமாக, முதலாம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவா்களுக்கு வருகிற 25-ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. காய்ச்சலால் பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சையளிக்கும் வகையில் அரசு மருத்துவமனைகளில் சிறப்பு சிகிச்சைப் பிரிவுகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

புதுச்சேரி, காரைக்காலில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சனிக்கிழமை ஒரே நாளில் 559 குழந்தைகளும், ஞாயிற்றுக்கிழமை புதுச்சேரியில் 31 குழந்தைகளும், காரைக்காலில் 7 குழந்தைகளும் என மொத்தம் 38 குழந்தைகள் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டனா்.

இவா்களில் தற்போது, புதுச்சேரியில் 196 குழந்தைகளும், காரைக்காலில் 19 குழந்தைகளும் என மொத்தம் 215 குழந்தைகளுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும், மற்றவா்கள் குணமடைந்து விட்டதாகவும் புதுவை சுகாதாரத் துறையினா் திங்கள்கிழமை தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com