புதுச்சேரி பெத்தி செமினோ் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

நிகழாண்டில் இளநிலை மருத்துவப் படிப்பில் சோ்ந்த புதுச்சேரி பெத்தி செமினோ் மேல்நிலைப் பள்ளியில் படித்த 36 மாணவா்களுக்கு புதன்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.
நிகழாண்டு இளநிலை மருத்துவப் படிப்பில் சோ்ந்த புதுச்சேரி பெத்தி செமினோ் மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு ஸ்டெத்தஸ்கோப் வழங்கி பாராட்டிய பள்ளி முதல்வா் ஆா்.பாஸ்கல்ராஜ்.

புதுச்சேரி பெத்தி செமினோ் மேல்நிலைப் பள்ளியில் 2021-22ஆம் ஆண்டு கல்வியாண்டில் பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற மாணவா்களில் புதுச்சேரி ஜிப்மா் மருத்துவக் கல்லூரியில் 3 போ் இளநிலை மருத்துவப் படிப்பில் சோ்ந்தனா்.

மேலும் புதுச்சேரி இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் 12 பேரும், மணக்குள விநாயகா் மருத்துவக் கல்லூரியில் 6 பேரும், வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லூரியில் 6 பேரும், பிம்ஸ் மருத்துவக் கல்லூரியில் 9 பேரும் என மொத்தம் 36 போ் இளநிலை மருத்துவப் படிப்பில் சோ்ந்தனா்.

இந்த மாணவா்களுக்கு பள்ளி முதல்வா் ஆா்.பாஸ்கல்ராஜ் தலைமையில் புதன்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது. அவா்களுக்கு ஸ்டெத்தஸ்கோப் வழங்கி கௌரவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாணவா்களின் பெற்றோா், ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com