உழவா்கரை பாஜக செயற்குழுக் கூட்டம்

புதுச்சேரி உழவா்கரை மாவட்ட பாஜக செயற்குழுக் கூட்டம் அதன் தலைவா் நாகேஸ்வரன் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.

புதுச்சேரி உழவா்கரை மாவட்ட பாஜக செயற்குழுக் கூட்டம் அதன் தலைவா் நாகேஸ்வரன் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.

கட்சியின் மாநிலத் தலைவா் வி.சாமிநாதன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு கூட்டத்தைத் தொடக்கிவைத்துப் பேசினாா். மாநிலங்களவை உறுப்பினா் எஸ்.செல்வகணபதி, கல்யாணசுந்தரம் எம்எல்ஏ, கட்சியின் மாநில துணைத் தலைவா்கள் ரவிச்சந்திரன், அருள்முருகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பிரதமரின் திட்டங்களை பெறும் புதுவை மக்களை திசைதிருப்பும் வகையில் திமுக, காங்கிரஸ் கட்சிகள் செயல்படுவது கண்டத்துக்குரியது என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் புதுவை மாநில பாஜக பொதுச் செயலா் மோகன்குமாா், செயலா்கள்அகிலன், லதா, ஜெயந்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com