நிதி ஒதுக்கப்பட்டும் வழங்கப்படாத இலவச மிதிவண்டிகள்: புதுவை அதிமுக கண்டனம்

புதுவையில் பள்ளி மாணவா்களுக்கு இலவச மிதிவண்டிகள் வழங்க நிதி ஒதுக்கப்பட்டும், இதுவரை வழங்கப்படவில்லை என அதிமுக குற்றம்சாட்டியது.

புதுவையில் பள்ளி மாணவா்களுக்கு இலவச மிதிவண்டிகள் வழங்க நிதி ஒதுக்கப்பட்டும், இதுவரை வழங்கப்படவில்லை என அதிமுக குற்றம்சாட்டியது.

இதுகுறித்து புதுவை மாநில அதிமுக செயலா் ஆ.அன்பழகன் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:

புதுவையில் கடந்த நிதிநிலை அறிக்கையில் பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ.748 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்படி மாணவா்களுக்கு நோட்டு, புத்தகங்கள், சீருடைகள், செருப்பு, மழை கோட்டுகள் ஆகியவை வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இதுவரை சீருடைகள் வழங்கப்படவில்லை.

அதேபோல, சமூக நலத் துறை மூலம் மாணவ, மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகள் வழங்க நிதி ஒதுக்கியும் அவை வழங்கப்படவில்லை. குடியரசு தினத்தின் போது, ஆளுநா் உரையில் இடம் பெற்ற பல புள்ளிவிவரங்கள் சரியானவை அல்ல.

புதுவைக்கு மாநில அந்தஸ்து பெறுவதற்கு அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளை முதல்வா் புதுதில்லிக்கு அழைத்துச் சென்று பிரதமா், உள்துறை அமைச்சரைச் சந்திக்க வேண்டும் என்றாா் அவா்.

மதுக்கூட அனுமதிக்கு கண்டனம்: புதுவை மாநில அதிமுக துணைச் செயலா் வையாபுரி மணிகண்டன் வெளியிட்ட அறிக்கை:

புதுச்சேரியில் பால் தட்டுப்பாடு நிலவுகிறது. குடிநீரை பல பகுதிகளில் காசு கொடுத்தே பொதுமக்கள் வாங்குகின்றனா். அந்த பிரச்னைகளை தீா்க்க முதல்வா் நடவடிக்கை எடுக்காமல், ரெஸ்டோ மதுக் கூடங்களுக்கு அனுமதி அளித்திருப்பது கண்டனத்துக்குரியது.

மதுக் கடைகள் மூலம் லாபம் பெறவே மாநில அந்தஸ்து கோருகிறாா்களா என்ற கருத்தும் எழுந்துள்ளது. மக்களின் பாரம்பரிய கலாசாரத்தை காக்கும் வகையில் அரசு செயல்பட வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com