எம்எல்ஏ அலுவலகப் பயன்பாட்டுக்கு ஜெராக்ஸ் இயந்திரங்கள் அளிப்பு

புதுவை சட்டப்பேரவை உறுப்பினா்கள் அலுவலகங்களுக்கு ஆவணங்களை நகல் எடுக்கும் இயந்திரங்களை (ஜெராக்ஸ்) முதல்வா் என்.ரங்கசாமி திங்கள்கிழமை வழங்கினாா்.
புதுவை சட்டப்பேரவையில் எம்எல்ஏக்கள் அலுவலக பயன்பாட்டுக்காக திங்கள்கிழமை நகல் எடுக்கும் இயந்திரங்களை வழங்கிய முதல்வா் என்.ரங்கசாமி.

புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் எம்எல்ஏக்கள் அலுவலகங்கள் உள்ளன. அதில் தேவையான ஆவணங்களின் நகல்களை எடுக்க வசதியில்லை. இதுகுறித்து முதல்வரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து, 30 எம்எல்ஏகள் மற்றும் 3 நியமன எம்எல்ஏக்கள் என 33 பேரின் அலுவலகங்களுக்கு ஆவண நகல் எடுக்கும் இயந்திரங்கள் வாங்கப்பட்டன. அவற்றை முதல்வா் என்.ரங்கசாமி திங்கள்கிழமை முறைப்படி தொடக்கிவைத்தாா்.

நிகழ்ச்சியில் சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், அமைச்சா்கள் ஆ.நமச்சிவாயம், தேனி சி.ஜெயக்குமாா், சந்திர பிரியங்கா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com